விடப்பெற்றன.
பொன்னும் கொடுக்கப்பெற்றன1, இவன் மதுரை கொண்ட
பரகேசரி வர்மன் எனக் குறிக்கப்பெறுகின்றான்.
பராந்தகன் I
காலங்களில் விளக்குக்காகப் பொன்னும் ஆடுகளும்,
அபிஷேகத்திரவியங்கட்காக நிலமும் அளிக்கப்பெற்றன.
செம்பியன் காரைக்காடு உடையானாலும்2 பராந்தகப்
பல்லவராயன் என்பவனாலும் விளக்கிற்காக ஆடுகளும்3
பணமும் அளிக்கப்பெற்றன. இவன் தருமங்களில்
விளக்கிற்காக அளித்தமையே பெரிதும் காணப்படுகின்றன.
விசலூர் உடைய நாயனார்க்குத் திருமஞ்சனநீர்
காவிரியிலிருந்து கொண்டுவர நிலம் விட்டான். இதில்
திருவிசலூர் மகாதேவ பட்டாரகர் என இறைவன் திருநாமம்
குறிக்கப்பெறுகின்றது 4.
முதல் இராஜராஜன்
கி.பி. 985 முதல் 1013 வரையில் ஆண்டவன். இவன் காலத்தில்
கோவில் விளக்குக்குப் பணம் கொடுக்கப்பட்ட செய்திகள்
குறிக்கப்பெறுகின்றன. கிராமங்களின் நிலவிற்பனைகளும்
பொறிக்கப்பெற்றுள்ளன இவனுடைய அரசி ஒருத்தி
பொன்னளித்திருக்கின்றாள் 5திருமஞ்சனத்தில்
இடப்பெறுகின்ற ஸ்நான திரவியங்களுக்காகவும்,
பிராமண போஜனத்திற்காகவும் பொன்னளித்திருக்கிறாள்.
மிகச் சிறப்பாக இவன் ஆட்சி 29 இல் அரசன் துலாபாரம்
புக்குத் தானம் செய்தான் என்றும், அரசி தந்திசத்தி
விடங்கியாரான லோகமாதேவியார் ஹேமகர்ப்பதானம்
செய்தாள் என்றும் குறிக்கப்பெறுகின்றன.
6பிச்சுதேவன் என்னும் அரசகாரியம் பார்ப்பான்
கருப்பக்கிருகப் பணிக்காக நிலம் விட்டமை தெரிகிறது.
இராஜேந்திரன். இவன் கி.பி. 1011 முதல் 1043 வரை ஆண்டவன்.
இவன் காலத்திய கல்வெட்டுக்கள் பதின்மூன்று உள்ளன.
அவற்றால், திருவிசநல்லூர் உடைய மகாதேவர்க்குத்
தங்கக் கச்சை அளித்ததும், சிதாரிக்காக நறும்புகையிட
நிலம் அளித்ததும், விளக்கிடப் பணமும் நிலமும்
ஆடுகளும் அளித்ததும் அறிவிக்கப் பெறுகின்றன7.
அவனுடைய மனைவியான அரசியொருத்தியால் அபிஷேகத்திற்கு
வெள்ளிக் கலசம் ஒன்று அளிக்கப்பெற்றது8. இவன்
தனது மூன்றாவது ஆண்டில் திருவிசநல்லூர் மாதேவர்
கோயிலையும், கோபுரத்தையும் திருப்பணி செய்தான்.
இவன் மனைவியான நக்கன் செம்பியன் மாதேவியாரால்
விளக்குக்கு ஏற்பாடு செய்யப்பெற்றது.
இவனுக்கு உருத்திரன்
அருள்மொழியான பிருதி
______________________
1-23 of 1907, 2-9 of 1907, 3-18
of 1907, 4-35 of 1907, 5-19 of 1907, 6-42 of 1907, 7-1, 15, 338, 339 of 1907, 8-
340 of 1907.
|