மகாதேவி என்றொரு
மனைவியும் இருந்தனர்1. இவனுக்கு அத்தையும், வல்லவராயர்வந்தியத்தேவர்
மனைவியுமான குந்தவ்வை தேவியார் பழையாறையில்
இருக்கும்போது நிலம் அளித்தார் என்ற செய்தியை
அறிவிக்கும் கல்வெட்டு சரித்திர ஆராய்ச்சியாளர்க்குப்
பெருவிருந்தாவது2.
குலோத்துங்கன் III.
இவன் கி.பி. 1178 முதல் 1218 வரை ஆண்டவன். இவனுடைய ஆட்சி
பதினெட்டாம் யாண்டில் நில விற்பனையைப்பற்றிக்
கூறுகிறது. அதில் வேம்பத்தூர் எதிரிலிச் சோழச்
சதுர்வேதி மங்கலமான வேம்பத்தூர் என அழைக்கப்பெறுகின்றது.
ஏனைய முதல் மூன்று கல்வெட்டுக்கள் அரசாங்க நில
அளவைமுறைகளையும் நிலவிற்பனையையும் அறிவிப்பன.
தென்புறப் பிராகாரத்தில்
உள்ள கருப்பக்கிருகத்தின் வடக்குச் சுவரில் அந்த
மண்டபத்தைக் கட்டியவனான ஆனந்த சிவன் என்பவனுடைய
உருவம் இருக்கிறது. அதில் ஒரு பகுதியைச் சுவர் மறைத்து
விட்டது.
14. திருக்கொடுங்குன்றம்
பாண்டியநாட்டுத்தலம்
இது பிரான்மலை என இக்காலத்து வழங்குகின்றது.
மேலும் மதுரை, மேலூர் சிங்கம்புணரியிலிருந்து
பேருந்துகளில் செல்லலாம். திருக்கோயில் அடிவாரத்தில்
உள்ளது.
மகோதர மகரிஷியும்,
நாகராஜனும் வழிபட்ட தலம். அருணகிரிநாதர் திருப்புகழ்
பெற்ற சுப்பிரமணியத் தலமாகும். மலை மேல் வைரவர்
சந்நிதி மிக விசேஷம். சுவாமி சந்நிதியில் திருக்கல்யாணக்கோலம்
சிறப்பானது. தேவசபா மண்டபம் என்ற ஒரு மண்டபம்
இருக்கின்றது.
இறைவன்பெயர்
கொடுங்குன்றீசர். தேவியார் குயிலமுதநாயகி. தேவாரம்,
‘தனிற் பொலிமொழியாள்’ எனக்
குறிப்பிடுகின்றது. இத்தலம் குன்றக்குடி திவண்ணாமலை
ஆதீன அருளாட்சியிலுள்ளது.
_____________________
1-349 of 1907, 2-350 of 1907.
|