கல்வெட்டு:
இத்தலத்தைப் பற்றியனவாக
இருபத்தொரு கல்வெட்டுக்கள் அரசியலாரால்
கி.பி.1903 ஆம் ஆண்டில் படியெடுக்கப் பெற்றுள்ளன.
அவற்றுள் எட்டுக் கல்வெட்டுகள் ஆராய்ந்து முடிவுகட்டப்பெற்றன.
ஏனையவை அறியப் பெறாதன. நான்கு கல்வெட்டுக்கள் குலசேகர
பாண்டியனுடைய ஆட்சி 10, 13 ஆம் ஆண்டுகளில் நிகழ்ந்தவை.
இவற்றை இங்ஙனம் வரையறுத்து எழுதியவர் ஸெவல் பாதிரியார்.
இத்தலத்தில் சுந்தரபாண்டியன்
மண்டபம் (இது கருப்பக் கிருகவாயிலில் உள்ளது) ஆறுகால்
மண்டபம்1, லக்ஷ்மி மண்டபம்2, முதலிய மண்டபங்களும்,
விசுவநாதர் கோயில்3, சுப்பிரமணிய சுவாமி
கோயில்4 முதலியனவும் கோயிலுக்குள் இருக்கின்றன.
பிரான்மலைக் கிராமத்தில் ஸ்ரீ சொக்கநாதர்
கோயில் உள்ளது5. இறைவன் மங்கைநாதர்6 எனவும்,
கொடுங்குன்றமுடைய நாயனார்7 எனவும், நல்லமங்கைபாகர்8எனவும், குன்றாண்ட நாயனார்9 எனவும், குறிப்பிடப்பெறுகின்றார்.
பாண்டிய மன்னர்களில்
சுந்தரபாண்டியன் I, சுந்தரபாண்டியன் II, பராக்ரம பாண்டியன்,
குலசேகர பாண்டியன், வீரபாண்டியன் இவர்கள்
விளக்குக்காகப் பசுக்களும், பொன்னும், சேவார்த்திகட்கு
உணவிற்கும், விளக்குத் தண்டு செய்தற்குமாகப்
பொன்னும் நிலமும் அளித்த செய்திகளை அறிவிக்கின்றன;
பல கல்வெட்டுக்கள். கி.பி.1251 - 1264க்குள் ஆண்ட
கோனேரின்மைகண்டான் காலத்தில் துவராபதி
வேளார், பிரபாவபுரந்தரன் ஆகியஇருவரும் நிலம்
அளித்தனர். இம்மடி நரசிங்கராயர் காலத்தில்
பிரான்மலைச்சீமை என்றும், திருமலை நாட்டுப்பகுதியான
பிரான்மலை என்றும் குறிக்கப் பெறுகின்றது. திப்பரசரையன்
நன்மைக்காகக் கேரளசிங்க வளநாட்டு இப்புலி நாயகர்
நிலம் அளித்தார். இங்கு ஒரு வியாபாரிகள் சங்கம்
இருந்ததாகவும் கல்வெட்டுக் கூறுகிறது8.
1924 ஆம் ஆண்டில்
படியெடுக்கப்பெற்ற கல்வெட்டுக்கள் 16. அவற்றுள்
ஐந்து, பாண்டியர்கள் காலத்தன. ஏனையவை விசயநகர
அரசர்கள் காலத்தன. சடாவர்மன் வீரபாண்டியன் ஆட்சி9
ஆம் ஆண்டில், திருஞானம் பெற்ற பிள்ளையார் படிமத்தை
எழுந்தருள்
____________________________________
1-144 of 1903, 2-142 of 1903,
3-146 of 1903, 4-152 of 1903, 5-154 of 1903, 6-138 of 1903, 7-140 of 1903,
8-154 of 1903, 9-202 of 1924,
|