பக்கம் எண் :

124தலங்களின் வரலாற்றுக் குறிப்புக்கள்(முதல் திருமுறை)


வித்துக் கேரளசிங்க வளநாட்டுக் குலசேகரன் பட்டினத்து அருவியூரானான கொடுங்குன்றமுடையான் ஒருவன் பூசைக்கு நிபந்தமும் அளித்தான்1. குலசேகர பாண்டியன் காலத்தில் கீழ்வேம்புநாட்டு இராசவல்லி புரத்துக் கொன்றைசேர் முடியானும், திருநெல்வேலியுடையானும் விளக்குக்கு ஆடுகள் அளித்தனர்2. கண்ணமங்கலமான திருவெங்கா உடைய நல்லூர்; அமோகமங்கலமான முதலி நாயக நல்லூர் உடையான் இருவரும் அர்த்தயாம பூசைக்கு நிலம் அளித்தனர். அந்தப் பூசைக்குத் தாழ்வுசெய்யாதான் சந்தியென்று பெயர்3. காரைக்குடியான் ஒருவன் மங்கைநாயகர் வசந்த உற்சவத்திற்காக வாணராய நல்லூரை இறையிலி செய்து அளித்தான்4. விஜயநகர அரசர்கள் வேதபாராயணத்திற்காகவும்5, உற்சவத்திற்காகவும்6, கானூர் முதலிய இடங்களை அளித்தனர்.

15. திருநெய்த்தானம்

சோழநாட்டுத்தலம். தஞ்சையை அடுத்துள்ள திருவையாற்றிற்கு மேற்கே 1.5. கி.மீ. தூரத்தில் உள்ளது. திருவையாற்று சப்தஸ்தான க்ஷேத்திரங்களில் ஏழாவது தலம். இங்கே கலைமகள் வழிபட்டுப் பேறுபெற்றாள். சுவாமிபெயர் நெய்யாடியப்பர். அம்மைபெயர் பாலாம்பிகை. ‘இளமங்கையம்மை’ எனத் தேவாரம் குறிப்பிடுகின்றது.

தீர்த்தம் - காவிரி. கிழக்குப்பார்த்த சந்நிதி. இப்போது தில்லைஸ்தானம் என வழங்குகின்றது. வடமொழியில் கிருதஸ்தானமாயிற்று. இறைவற்குப் பசுநெய் அபிஷேகிப்பது வழக்கம்.

கல்வெட்டு:

இத்தலத்தில் அரசியலார் படிஎடுத்த வண்ணம் 51 கல்வெட்டுக்கள் உள்ளன. அவற்றுள் இத்தலம் இராஜாதிராஜன் காலத்தில் இராஜராஜ வளநாட்டுப் பைங்காநாட்டுத் திருநெய்த்தானம் எனக் குறிக்கப்பெறுகின்றது. இத்தலத்து பராந்தகன் I முதலாக ஐந்து சோழ அரசர்களின் தானங்களைக் குறிக்கும் நிகழ்ச்சிகளும், நந்திவர்மன் தான நிகழ்ச்சிகளும் குறிக்கப்பெறுகின்றன. செம்பியன் ஈக்காட்டு வேளானான பரிசைகிழான் மறவன்நக்கன் என்பவன் 13 கழஞ்சு

_______________________________

1-208 of 1934. 2-194 of 1924, 3-202 of 1924, 4-203 of 1924, 5-207 of 1924, 6-196 of 1924.