பொன்னைக் கோயில்
விளக்கிற்காகக் கொடுத்தான்1. கூத்தன்
அருள்மொழியான வானவன் பேரரையன் நிலத்தை 25 கழஞ்சு
பொன்னுக்கு நங்கை வரகுணபெருமானார் வாங்கி
விளக்கிற்காக வைத்தாள்2. சாமர கேசரி தெரிஞ்ச
கைக்கோளர், விக்ரமசிங்க தெரிஞ்ச கைக்கோளர்,
இருவராலும் பைங்காநாட்டுக் கீழப்பிலாறு கிராமத்தில்
நிலம் அளிக்கப் பெற்றது. முற்கூறிய சாமரகேசரி தெரிஞ்ச
கைக்கோளருள் ஒருவனான மல்லன் ஆரியனால் நிவந்தம்
விடப்பெற்றது. கோயில் காரியத் தலைவனான காமக்கோடநல்லூர்
ஆயனால் இரு பொன்பட்டங்கள் கடவுளுக்குக் கொடுக்கப்பெற்றன3.
சோழப் பெருமானடிகளுடைய காமக் கிழத்தியான நங்கை
கூத்தப் பெருமானார் 30 கழஞ்சு பொன்னை
விளக்குக்காக வைத்தார். அதனைத் திருநெய்த்தானச்
சபையார் சுவாமிக்கு ஸ்நபன மண்டபங்கட்டப் பயன்படுத்தி
விட்டனர். அதற்குப் பதிலாகக் கோயில் நிலங்கள்
சிலவற்றை ஏற்பாடு செய்தனர். வளவர்கோன் பேரரையன்
என்பவனும், செம்பியன் தமிழவேளான் விக்கணன்
மனைவி கடம்பமா தேவியும், தென்னவன் பிரதிமாராசனான
கட்டி ஒற்றியூரான் பராந்தகனும், இளங்கோவேண்மான்
மனைவியான வரகுணப் பெருமானாரும் விளக்கிற்காகப்
பொன்னும், நிலமும் அளித்தனர். முண்டங்குடி உடையானான
கண்ணங்குடி நாராயணன் நைவேத்யத்திற்கு நெல்லளித்தான்.
இது அளித்தகாலம் பராந்தகன் I காலம். மேளக்காரன்,
தேவதாசி, வாணிகன் இவர்கள் தருமமும் விளங்கின என்பதை
மூன்று கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன4. கோப்பர
கேசரியான பராந்தகன் I க்கு மாமியார் முள்ளூர் நங்கையென்று
தெரிகிறது.5
16. திருப்புள்ளமங்கை
சோழநாட்டுக்
காவிரித் தென்கரைத் தலம். பசுபதிகோயில் இரயில்
நிலையத்திலிருந்து வடக்கே 3.கி.மீ. தஞ்சையை அடுத்துள்ள
ஐயம்பேட்டையிலிருந்து கண்டியூர் செல்லும்
பேருந்துச் சாலையில் உள்ளது. ஊர்ப்பெயர் - புள்ளமங்கை.
கோயிற்பெயர் ஆலந்துறை. தேவர்கள் அமுதங் கடைந்தபோது
உண்டானவிடத்தை அமுதுசெய்த இடம் ஆதலின் ஆலந்துறை
எனத் திருக்கோயில் வழங்கப்பெறுகின்றது. தலம் திருப்புள்ளமங்கை.
இன்று பசுபதிகோயில் எனவும் வேளாளப்
பசுபதிகோயில் என அடைமொழி சேர்த்தும் வழங்குகிறது.
___________
1276 of 1911, 2-277 of 1911,
3-283 of 1911,
4-22, 33, 36 of 1895, 5-45 of
1895.
|