பக்கம் எண் :

126தலங்களின் வரலாற்றுக் குறிப்புக்கள்(முதல் திருமுறை)


பிரமன் பூசித்ததலம். புள்ளமங்கை என்பதற்கேற்பக் கோபுரத்தில் கழுகுகள் எப்பொழுதும் வசித்துவருகின்றன. ‘பொந்தின் இடைதேனூறிய’ என்னும் அருளாளர் வாக்கிற்கியையப் பொந்துகளில் எல்லாம் தேனடைகள் காணப்படும். திருச்சக்கரப்பள்ளியின் சப்தஸ்தானத் தலங்களில் இதுவும் ஒன்று.

இறைவன் ஆலந்துறைநாதர், இறைவி அல்லியங்கோதை. பசுபதிநாதர் எனவும் வழங்கும். தீர்த்தம் காவிரி.

கல்வெட்டு:

அரசியலாரால் கி.பி. 1921 இல் படியெடுக்கப்பட்ட 546 முதல் 559 வரையுள்ள பதின்மூன்று கல்வெட்டுக்கள் உள்ளன.

17. திருஇடும்பாவனம்

சோழநாட்டுக் காவிரித் தென்கரைத்தலம். நாகைமாவட்டம் திருத்துறைப்பூண்டியிலிருந்தும் முத்துப்பேட்டையிலிருந்தும் பேருந்துகளில் செல்லலாம். இடும்பன் பூசித்துப் பேறுபெற்ற தலமாதலின் இப்பெயர் பெற்றது. இடும்பனது தலைநகரமாகிய குன்றளூரும் அருகாமையில் இருப்பது அறியத்தக்கது. இங்கு வெண்மைநிறமுடைய ‘வெள்ளை விநாயகர்’ விசேஷமானது. இறைவரது மணவாளக் கோலம் மூலத்தானத்தின் பின்புறம் அமைந்துள்ளது. அகத்தியர்க்குக் காட்சிகொடுத்த தலம்.

சுவாமி பெயர் சற்குணநாதர்; அம்மைபெயர் மங்களநாயகி. தீர்த்தம் சமூகபுஷ்கரணி.

இத்தலத்தைப் பற்றியதாகக் கல்வெட்டொன்றும் அறியக் கூடவில்லை.

18. திருநின்றியூர்

சோழநாட்டு காவிரி வடகரைத்தலம். நாகைமாவட்டம் மயிலாடுதுறை, வைத்தீஸ்வரன்கோயில் பேருந்துவழியில் உள்ளது.

திருமகள் வழிபட்டு நிலைபேறு எய்திய தலம். சோழன் ஒருவன் திருவிளக்கிட்டுத் தினந்தோறும் வழிபட்டுவந்தான். அவன்