கொண்டுவந்த திரி
ஒருநாள் நின்றுவிடவே, சிவலிங்கத்தினின்றும்
ஒருசோதி தோன்றி, அவன் வழிபாட்டிற்கு இடையூறுண்டாகாமல்
உதவியது. அதனால் திரிநின்றவூர் ஆயிற்று. அது இப்போது
திரு நின்றவூர் என வழங்குகின்றது என்பது செவிவழிச்செய்தி.
பரசுராமன் நின்றி
யூரை இறைவற்கும், பக்கத்திலுள்ள 360 வேலி நிலத்தை
வேதியர்கட்கும் அளித்து வழிபட்டான் என்பது புராண
வரலாறு. இதனையே சுந்தரர் தேவாரம் தக்கேசி மூன்றாம்பாடல்
குறிப்பிடுகிறது. அடுத்த பாடலில், பசு பால்சொரிந்து
அபிஷேகித்து வந்ததாகவும் ஒரு வரலாறு குறிக்கப் பெற்றுள்ளது.
சுவாமிபெயர் லக்ஷ்மிபுரீசுவரர்;
மகாலட்சுமிநாதர். அம்மை பெயர் உலகநாயகி. தீர்த்தம்
நீலதீர்த்தம். (இது அபிதான சிந்தாமணி கூற்று)
மகாலக்ஷ்மி தீர்த்தம்
எனவும் வழங்கும்.
கல்வெட்டு:
இத்தலத்தைப்பற்றிய
கல்வெட்டு ஒன்றே உள்ளது. 1921ம் ஆண்டில் படியெடுக்கப்பெற்றுள்ளது.
திரிபுவன சக்ரவர்த்தி இராஜராஜதேவர்க்கு ஆண்டு
15வது கும்பரவி அட்டமி ஞாயிறு மூல நக்ஷத்திரம் என்று
தொடங்குகிறது1. தருமை ஆதீனக் கோயில்களில் ஒன்று.
19. திருச்சிவபுரம்
சோழநாட்டுக்
காவிரித் தென்கரைத்தலம். தஞ்சைமாவட்டம் கும்பகோணத்திலிருந்து
பேருந்துகளில் செல்லலாம். தனபதி அரசன் தன் சாபவிமோசனத்திற்காக
ஒரு பிராமணக்குழந்தையை வாங்கித் தந்தையும் தாயும்
பிடிக்கச் சோமவார சிவராத்திரியில் அறுத்து அபிஷேகிக்க,
அம்பாள் வெளிப்பட்டு. அந்தக்குழந்தைக்கு அநுக்கிரகித்தார்
என்பது செவிவழிச்செய்தியான வரலாறு. வெள்ளைப்பன்றியாகி
திருமால் வழிபாடு செய்த தலம். சுவாமிபெயர்
சிவபுரநாதர். அம்மை பெயர் சிங்காரவல்லி. தீர்த்தம்
சந்திரபுஷ்கரணி. கார்த்திகைச் சோமவாரங்களில்
தீர்த்த விசேஷம். கடைசிச் சோமவாரத்தில் உற்சவம்.
அரசியலார் 1927ல் படியெடுத்த 272 முதல் 282 எண் உள்ள 10
கல்வெட்டுக்கள் உள்ளன.
___________________________
1-538 of 1921. மீனரவி என்றும்
பாடம் உண்டு.
|