பக்கம் எண் :

128தலங்களின் வரலாற்றுக் குறிப்புக்கள்(முதல் திருமுறை)


20. திருமறைக்காடு

சோழநாட்டுக் காவிரித் தென்கரைத்தலம். நாகைமாவட்டம் திருத்துறைப்பூண்டியிலிந்தும் நாகையிலிருந்தும் பேருந்துகளில் செல்லலாம் திருத்துறைப்பூண்டியிலிருந்து இரயிலிலும் செல்லலாம். இத்தலம் இன்று வேதாரண்யம் என வழங்குகின்றது. வேதங்கள் வழிபட்டமையால் இப்பெயர் பெற்றது. ஆதிராமர் இங்குவந்து, அணைகட்டி, இலங்கைசென்று, இராவணவதஞ்செய்தனர். பின்னர் அப்பழிநீங்கப் பூசித்தார். ஆதலால் ஆதிசேது எனவும் வழங்கும். பிரமதேவர் பூசித்து இறைவன் வாயிலாகவே வேதோபதேசம் பெற்றுச் சிருட்டித்தொழில் கைவரப்பெற்றார். விஸ்வாமித்திரர் பூசைசெய்து பிரமரிஷியாயினர். பிந்திய இராமர் பூசித்து வீரகத்திதோஷம் நீங்கப் பெற்றார். தென்திசையைச் சமப்படுத்த இறைவன் ஆணையால் வந்த அகத்தியமுனிவர்க்கு, இறைவன் மணவாளத் திருக்கோலங்காட்டிய தலம். சுவாமிக்குப் பின்புறம் கருப்பக்கிருகத்துள்ளேயே மணவாளப் பெருமான் திருவுருவம் இருக்கிறது. நெய்யுண்ணவந்த எலி, அபுத்திபூர்வமாகவே திரியைத்தூண்ட, அதனால் மறுபிறப்பில் அவ் எலி மாவலிச்சக்ரவர்த்தியாகிப் பேறுபெற்ற தலம். இதனைத் திருக்குறுக்கைத் தேவாரத்துள் அப்பர் சுவாமிகள் "நிறைமறைக் காடுதன்னில்" என்னும் திருப்பாடலில் விளக்கியிருக்கிறார்கள்.

மூர்த்திகள்:

இறைவன்பெயர் வேதாரண்யேசுவரர்; தேவாரம் ‘மறைக்காட்டுறையும் மணாளன்’ எனக் குறிக்கின்றது. அம்மைபெயர் யாழைப்பழித்த மொழியம்மை; வீணாகானவிதூஷணி எனவும் வழங்குவர். தலவிருட்சம் வன்னி. சப்தவிடங்கத் தலங்களுள் ஒன்றாதலின் தியாகேசமூர்த்தி எழுந்தருளியிருக்கின்றார். அவர் பெயர் புவனிவிடங்கர். நடனம் ஹம்சநடனம்.

தீர்த்தம்:

மணிகர்ணிகை, வேதபூஷண தீர்த்தம், வேதாமிருதம் (கடல்) முதலியன.

ஞானசம்பந்தசுவாமிகளும், அப்பமூர்த்திகளும் இத்தலத்திற்குத் தரிசனத்திற்காக எழுந்தருளியபோது, வேதங்கள் பூசித்த காலத்து அவை அடைத்த நேர்க்கதவும் திறக்கப்படாமலே வழக்காறற்றிருக்க, அப்பர் திறக்கவும், சம்பந்தர் அடைக்கவும் பாடி அற்புதம்