பக்கம் எண் :

 தலங்களின் வரலாற்றுக் குறிப்புக்கள்129


நிகழ்த்திய தலம். சுந்தரமூர்த்திகள் சேரமான் பெருமாளோடு எழுந்தருளி வழிபட்டதலம். இங்கு கோடிதீர்த்தம் ஆதிசேது மிக விசேடமானது. உருத்திரகோடி என்னும் இடத்திலும் கடலாடுவது வழக்கம். அது புதை சேற்றுக் கடலாதலின் மிக எச்சரிக்கையாக இருத்தல் வேண்டும். அழகான கோடியக்காடு உண்டு. கோடிக் குழகர் கோயில் விசேடம்.

தலவிநாயகர் சிந்தாமணி விநாயகர். இராவணன் வழிபட்ட விநாயகர் வீரஹத்தி விநாயகர். துர்க்கை சந்நிதி விசேடமானது. வேதாரணியம் விளக்கழகு என்று ஒரு பழமொழி இத்தலத்தைப் பற்றி வழங்கி வருகிறது. அதனாலே பராந்தகசோழர் முதலிய பலர் விளக்குத் தருமமே செய்திருக்கிறார்கள்போலும்.

கல்வெட்டு:

இத்தலத்திலுள்ள கல்வெட்டுக்களை அரசியலார் கி.பி.1904 ஆம் ஆண்டில் படியெடுத்திருக்கிறார்கள். மொத்தம் 89 கல்வெட்டுக்களும், ஒரு செப்புப்பட்டயமும் இருக்கின்றன. அவற்றுள் சோழ மன்னர்கள் காலத்தன எண்பத்திரண்டு. ஏனையவற்றுள் ஒன்று தஞ்சை துளஸாமகாராஜாவின் மகனான பிரதாபசிம்ம மகாராஜாவினது. மற்றவை இரண்டும் விஜயநகர அரசன் பிரபுடதேவ மகாராய, தேவமகாராயர் என்பவர்களுடையன. ஒன்று இன்னாருடைய என்று அறியப்பெறாத செப்புப்பட்டயம்.

சோழர்காலத்துக் கல்வெட்டுக்கள் முதற்பராந்தகன் முதல் குலோத்துங்கன் III வரை உள்ளன. அவற்றுள் முதற்பராந்தகன் செய்த விளக்கீடுகள் பற்றிய தருமம் 38 கல்வெட்டுக்களால் அறிவிக்கப் பெறுகின்றன.

இத்தலம் உம்பள நாட்டுக் குன்னூர்நாட்டுத் திருமறைக்காடு எனக் குறிக்கப்பெறுகின்றது1. முதற் பராந்தக சோழன் காலத்துக் கல்வெட்டுகள் அனைத்தும் அவனுடைய ஆட்சி 5ம் ஆண்டுமுதல் 34ம் ஆண்டு வரை ஆண்டுகள்தோறும் விளக்குவைக்க ஆடுகளும், நிலமும், பொன்னும் அளித்தமையை அறிவிக்கின்றன2. இராஜராஜதேவனும், பரகேசரி இராஜராஜனும், குலோத்துங்கன் I குலோத்துங்கன் III இவர்களும் விளக்குக்கு நிலமும் ஆடுகளும் அளித்திருக்கின்றனர். இராஜேந்திரன் III காலத்தில் ஆட்சி 16-ம் ஆண்டில்

_____________________

1-415 of 1094, 2-433 of 436, 444 to 459, 463 of 469,

478 to 488 of 1904.