நிலம்விட்ட செய்தி
அறியப்பெறுகின்றது1. இராஜராஜன் III காலத்தில்
சிங்கள தண்ட நாயகனால் கோடிக்குழகர்கோயில்
சீரணோத்தாரணம் செய்விக்கப் பெற்றது2. கி.பி.
1496-ல் அர்ச்சகருக்குச் சில உரிமைகள் வழங்கப்
பெற்றன என்று செப்புப்பட்டயம் கூறுகிறது.
21. திருக்கோலக்கா
சோழநாட்டுக்
காவிரி வடகரைத்தலம். சீகாழிக்கு மேற்கே 1
கி.மீ. தூரத்தில் உள்ளது.
இத்தலம்
திருத்தாளமுடையார்கோயில் என வழங்குகிறது.
திருஞானசம்பந்த சுவாமிகள் திருமுலைப்பால்
உண்டருளிய மறுநாள், இத்தலத்திற்கு எழுந்தருளிக்
கையினால் தாளம் இட்டுப் பாடினார். அப்போது
இறைவன் திருவருளால் திருவைந்தெழுத்து எழுதப்பெற்ற
பொற்றாளம் இவர் கைவந்தருளப்பெற்றது. சுவாமி
பெயர் சப்தபுரீசுவரர். அம்மைபெயர்
ஓசைகொடுத்தநாயகி. கிழக்குப் பார்த்த சந்நிதி.
கோயில் வாயிலில் அழகான தீர்த்தம் இருக்கிறது.
சீகாழி திருமுலைப்பால் விழா அன்று மாலை
ஞானசம்பந்த சுவாமி இங்கு எழுந்தருளுவர்.
22.
திருச்செம்பொன்பள்ளி
சோழநாட்டுக்
காவிரித்தென்கரைத்தலம். மயிலாடுதுறையிலிருந்து
பேருந்து வசதி உள்ளது.
இத்தலம்
செம்பொனார்கோயில் என இக்காலத்து வழங்கப்
பெறுகின்றது. இந்திரன் விருத்திராசுரனைக்
கொல்வதன் பொருட்டுப் பூசித்து வழிபட்டான்.
அதனால் இந்திரபுரி எனவும் வழங்கப்பெறும்.
முருகப்பெருமான் தாரகாசுரவதத்தின் பொருட்டுப்
பூசித்தமையின் ஸ்கந்தபுரி எனவும் வழங்கும்.
அகஸ்தியர் வழிபட்டுப் புருஷார்த்தங்களைப்
பெற்றார். பிரமன் பூசித்துப் படைப்புத்தொழில்
கைவரப் பெற்றான். இரதி பூசித்துத் தன் பதியாகிய
காமனையடைந்தாள். நாககன்னியர்கள் வழிபட்டு
நல்ல கணவரை அடைந்தனர். இந்திரன்,
தக்ஷன்யாகத்தில் கலந்துகொண்ட குற்றத்திற்குப்
பரிகாரந்தந்தருளிய தலமும் இதுவே. வசிட்டர்,
திக்பாலகர்கள், காவிரி, சமுத்திரம்
முதலியவர்களும் பூசித்துப் பேறு பெற்றனர்.
வீரபத்திரர் தக்ஷயாகத்திற்காக
___________________
1-460 of 1904, 2-501 of 1904.
|