பக்கம் எண் :

 தலங்களின் வரலாற்றுக் குறிப்புக்கள்131


அவதரித்த தலமும் இதுதான். இத்தலத்திற்கு அருகாமையில் ஓடும் காவிரியில் இட்ட எலும்புகள் பூமரங்களாய் இறைவனுக்குச் சாத்தப் பயன்பெறும்.

சுவாமிபெயர் சுவர்ணபுரீசுவரர். அம்மை பெயர் சுகந்தவனநாயகி; மருவார்குழலி. தலவிருட்சம் வன்னி தீர்த்தம் இந்திர தீர்த்தம், காவிரி முதலியன. கிழக்குப்பார்த்த சந்நிதி. அம்மை தென்பக்கத்தில் மேற்குமுகமாக எழுந்தருளியிருக்கின்றார்.

கல்வெட்டு:

இத்தலத்தைப்பற்றியனவாக 6 கல்வெட்டுக்கள் உள்ளன. அவை 1925இல் படியெடுக்கப்பெற்றுள்ளன. இராஜாதிராஜன் ஆட்சி ஐந்தாமாண்டில் திருவாலங்காடுடையார்க்கு விளநகரான நித்த விநோத சதுர்வேதிமங்கலத்து விளநாட்டுச்சபையார் நிலம் விட்ட செய்தியை அறிவிப்பது. அதேயாண்டில் இராஜதிராஜவளநாட்டு திருஇந்தளூர் நாட்டு மணற்குடியான உத்தமசோழ சதுர்வேதிமங்கலத்துச் சபையார், செயங்கொண்டசோழ மண்டலத்து ஆக்கூர்நாட்டு ஆக்கூரான இராஜேந்திரசிம்ம சதுர்வேதிமங்கலத்து மேல்பாதி அபிமானமநல்லூரில் அரசற்கு நன்றாக, வழிபடவருவோர்க்கு உணவிற்காக நிலம் வழங்கப்பெற்றுள்ளது1. மூன்றாங்குலோத்துங்கன் காலத்து இராஜேந்திர சிம்ம நாடாகிய ஆக்கூரில் தூண்டாவிளக்கெரிக்க நாற்பது பொற்காசுக்கு நிலம் வாங்கி உழவரிடம் ஒப்படைக்கப்பட்டது. 6ஆம் ஆண்டில் அரசியலில் சிறந்த செய்தி ஒன்று அறிவிக்கப்படுகிறது. சிங்களவர்களைத் துணைக்கொண்டு பாண்டியர்கள் படையெடுத்துவந்த படையேறு கலகத்தில் செம்பொன்னார் கோயிலிலுள்ள தேவடியாரும் கோயில் நியாயத்தாருமாகச் சேர்ந்து எல்லாத் திருவுருவங்களையும் திருவிடைக்கழி இளையபிள்ளையார் கோயிலில் கொண்டுபோய் வைத்துப் பாதுகாத்தனர். மேலும் அவ்வாண்டில் பெரிய புயற்காற்றடித்திருக்கின்றது. அதனால் தப்பாத வேதியன் திருவாசல் வடக்குச்சுவரும் தேரடி இரண்டும் வீழ்ந்தன2 இன்னார் என்று அறியப்படாத இராஜகேசரி வர்மன் ஆறாம் ஆண்டில் பூசைக்கும் பணிக்குமாகத் தலைச்செங்காட்டுச் சபையார் ஒருவனிடமிருந்து நிலம் வாங்கி அரசற்கு நன்றாக அளித்தனர். இதில் இராஜசுந்தரன்வீதி என்ற ஒரு தெருப்பெயர் குறிப்பிடப்படுகின்றது3. சரபோஜிராஜா கலி 4821-ல் செம்பொன்னாதர் கோயிலுக்குத் தலைச்சங்காடு சபையார் கிராமங்களின் நன்மைக்காக ஆண்டுக்கு ஒருமுறை

____________________

1-172, 173 of 1925, 2-170, 171 of 1925, 3-174 of 1925.