வரியோடுகூட
தறிகளின் உற்பத்தியளவையொட்டி ஆயம்
வசூலித்துக் கொள்ளவும் காவேரிப்பட்டினம்
அய்யாவையனும் தாண்டவராய முதலியாரும்
வசூலிப்பாளராயிருக்கவும் ஆணை தரப்பட்டுள்ளது1.
23. திருப்புத்தூர்
பாண்டிய
நாட்டுத்தலம். தஞ்சை மதுரை பேருந்து
வழித்தடத்திலுள்ளது. மதுரை, புதுக்கோட்டை,
காரைக்குடி, சிவகங்கை ஆகிய ஊர்களிலிருந்து
பேருந்து வசதிகள் உள்ளன. இத்தலம் திருப்புத்தூர்
எனவும், கோயில் திருத்தளி எனவும் வழங்கும்.
அப்பர் சுவாமிகள் ‘திருப்புத்தூரில்
திருத்தளியான் காண்’ என அறிவிப்பார்கள்.
உமாதேவியும், இலக்குமியும் பூசித்துப் பேறுபெற்ற
தலம். இறைவன் அம்மை சந்நிதிகளுக்கு இடையில்
பைரவர் சந்நிதி இருக்கிறது. பைரவர்
சிறப்புடையவர். ஆனந்தக்கூத்தப்பெருமான்,
சிவகாமியம்மை திருவுருவங்கள் கற்சிலையாலான
கண்கவரும் வனப்பின. விஷ்ணுவுக்கும் சந்நிதி உண்டு.
சுவாமிபெயர்
புத்தூரீசர்; திருத்தளிநாதர். அம்மை சிவகாமி
அம்மையார். தீர்த்தம் திருத்தளித் தீர்த்தம்.
சிவகங்கை முதலியன. தலவிருட்சம் கொன்றை.
கல்வெட்டு:
அரசியலாரால் 1908ம்
ஆண்டில் படியெடுக்கப்பெற்ற கல்வெட்டுக்கள் 51
உள்ளன.
இறைவன் திருப்பெயர்
திருக்கற்றளிப்பட்டாரர்;2 ஸ்ரீதளி பரமேஸ்வர்3,
திருத்தளி உடைய பரமேஸ்வரர், திருத்தளி ஆண்ட
நாயனார்4, என வழங்கப் பெறுகின்றார். அம்மை
திருக்காமக் கோட்டமுடைய நாச்சியார்5,
திருப்பள்ளிறை நாச்சியார் எனவும்
வழங்கப்படுகின்றார். இவர்களேயன்றிக்
கோயிலுக்குள்ளே கைலாசமுடைய நாயனார்6,
அகஸ்தீஸ்வரம் உடையார்7 கோயில்களும்
இருந்தனவாக அறியப்படுகின்றன. பைரவர் கோயில்
மிகப் பிரசித்தமானது8. விஜயநகரத்தை அரசாண்ட
வீரப்பிரதாப அச்சுததேவ
____________________________
1-175 of 1925, 2-90 of 1908, 3-93
of 1908, 4-99 of 1908,
5-123 of 1908, 6-114 of 1908,
7-130 of 1908, 8-121 of 1908.
|