மகாராயர்
நன்மைக்காகப் பெரிய ராமப்ப நாயக்கரால்
பைரவருக்கு நிலம் அளிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
இதைப்பற்றிய குறிப்புக்கள் விஜயநகர அரசர்கள்
கல்வெட்டுக்களில் இதற்கு முந்தியதில் இல்லை.
கைலாசமுடையநாயனார்
கோயில் தேவரடியாளான ஒருத்தி திருநாவுக்கரசு
நாயனார் படிவத்தைப் பிரதிஷ்டை செய்யவும்,
நைவேத்தியத்திற்காகவும் பொன் அளித்த
செய்தியைத் திரிபுவன சக்கரவர்த்தி
விக்கிரமபாண்டியன் 12-ஆம் ஆட்சியாண்டு
கல்வெட்டொன்று காட்டுகின்றது1. கோவில்
அடியாளுக்கிருந்த அடியார் பக்தி என்னே!
திருஞானசம்பந்தர் திருமடமும்2
திருத்தொண்டத்தொகைத் திருமடமும்3 சைவமடம்
ஒன்றும் இருந்தன. இவற்றுள் திருஞானசம்பந்தர்
திருமடத்தில் ஸ்ரீகண்ட சிவாச்சாரியர்
இருந்ததாகவும் சோழதேசத்தில் இருந்த நிலத்தை
விற்று அவருக்குக் கொடுக்கப்பெற்றதென்றும் அதே
கல்வெட்டு அறிவிக்கின்றது. இக்கல்வெட்டு
மாறவர்மன் சுந்தர பாண்டியன் I (கி.பி.1214 - 35)
காலத்தது.
இவையன்றிக் கிராம
தேவதைகளாக அங்காளம்மன் கோயில்4, நின்ற
நாராயணப்பெருமாள்கோயில்5 இவைகளும்
திருப்புத்தூர் கிராமங்களில் இருந்தனவாகக்
குறிக்கப்படுகின்றன. பெருமாள் கோயில்,
திருத்தளி உடையார்கோயிலிலேயே இருந்ததாகக்
குறிக்கப் பெறாமை ஊன்றி அறிதற்குரியது.
இத்தலத்து நிகழ்ச்சிகள் யாவும் பாண்டியர்
காலத்துக் கல்வெட்டுக்களாகவே பெரும்பாலும்
அமைந்திருக்கின்றன. ஸ்ரீவல்லப பாண்டியன்
காலத்தில் இராஜேந்திரசோழ கேரளனான
நிச்சலராஜனால் கேரளசிங்க வளநாட்டில்
விளக்கிற்காக 50 ஆடு கொடுக்கப்பெற்றிருக்கிறது6.
அரசனாலேயே 25 பசுக்களும் ஒரு காளையும்
விளக்கிற்காகக் கொடுக்கப்பெற்றிருக்கின்றன7.
சோழ தேசத்தில் கயாமாணிக்க வளநாட்டு மருகல்
நாட்டுப் புத்தனூரில் வசித்த ஒருவர் 25
பசுக்களையும் ஒரு காளையையும் விளக்கிற்காகக்
கொடுத்தார்.8 காளிங்கராயன் வேண்டுகோளுக்காக
இரண்டு கிராமங்கள் அளிக்கப்பெற்றன. உலக
முழுதுடையாள் என்னும் அரசியால் மடப்பள்ளித்
திருப்பணி செய்யப் பெற்றது9.
பராக்கிரம
பாண்டியன்:
இவன் காலத்திய
கல்வெட்டுக்கள் 4 உள்ளன. அவற்றால்
__________________________
1-117 of 1908, 2-129 of 1908, 3-6
of 1908, 4-138 of 1908, 5-140 of 1908, 6-93 of 1908, 7-108 of 1908, 8-109 of
1908, 9-115 of 1908
|