இவன் ஆட்சி
பதினொராம் ஆண்டில் புறமலைநாட்டுப்
பொன்னமராவதியான இராஜேந்திரசோழ நிஷதராயன்
என்பவனால் திருத்தளி உடையார் கோயில்
உற்சவத்திற்காக நெல் அளிக்கப்பெற்றது1.
திருப்புத்தூர்ச் சபையார்கூடி நரலோக வீரன் சந்தி
என்னும் விழாவிற்காக நிலம்விற்றுக் கொடுத்த
வரலாறு அறிவிக்கப்பெறுகிறது2. ஓர் அந்தணனால்
திருப்பள்ளி அறை நாச்சியார்
நிவேதனத்திற்காகப் பொன் அளிக்கப்பெற்றது.
உய்யவந்தான் கண்டிதேவனான காங்கேயன்
என்பவனால் கோயிலுக்கு அளிக்கப்பெற்ற
சாசனங்கள் பட்டியலாகக்
குறிக்கப்பெற்றிருக்கின்றன.
குலசேகர பாண்டியன்:
நியமம் என்னும்
ஊரான் ஒருவனால் விளக்குத்தண்டுக்காகப்
பொன்னும், தேனாற்றுப்பாசன வசதியும் செய்து
கொடுக்கப்பெற்றதாக அறியப்பெறுகிறது. அதிசயப்
பாண்டிய நல்லூரான குட்டக்குடியில் கண்டன்
உய்யவந்தானான காங்கேயனால் திருப்பதியம்
விண்ணப்பிப்பார்க்கு இறையிலியாக
அளிக்கப்பெற்றது. இந்த நிலம், வீரகுணப்பெருமாள்
என்பவரால் திருப்புத்தூர் திருத்தளியிலுள்ள
கூத்தாடு தேவரான நடராஜ தேவருக்கு
அளிக்கப்பெற்றிருந்தது. அதே கோயிலிலுள்ள
சைவமடம் ஒன்றிற்குத் திருவாலந்துறை உடையானான
திருக்கொடுங்குன்ற முடையான் நிஷதராஜனால் சில
வரிகள் வசூலித்துக்கொள்ள உரிமை
அளிக்கப்பெற்றது. திருப்புத்தூர் மூலபரிஷத்
என்னும் சபையார் மதுரைசென்று கோயில்
நிலங்களுக்கு வரி கட்டி வரவேண்டியதற்காக
வழிப்பயணச்செலவான ஒரு குறிப்பிட்ட தொகையைத்
தள்ளுபடி செய்து கொடுத்திருக்கிறான்.
கைலாசமலைநாதர்
கோயில் திருவிழாவிற்காகச் சம்வத்சர
வாரியமாக வரி தள்ளுபடி செய்தமை
குறிக்கப்பெற்றுள்ளது. தயாபஞ்சகம்
என்றழைக்கப்படும் மண்டபத்தில் மூலச்சபையார்
கூடிச் சில கொடுக்கல் வாங்கல்கள் செய்த
செய்தியும், திருத்தொண்டத் தொகையான்
திருமடமும் குறிக்கப்பெறுகின்றன. சோழபாண்டிய
வளநாட்டு குலசேகரநாட்டுப் பிராமணி ஒருவனால்
கோயிலில் நான்கில் மூன்று பங்கு விளக்குக்களை
ஏற்றப் பொன்வழங்கப் பெற்றது. கண்டிய தேவரால்
திருக்காமக் கோட்டமுடைய நாச்சியாரை மருந்து
சாத்திப் பிரதிஷ்டை செய்யத் தம்முடைய
நிலக்குடிவார உரிமை விற்றுக் கொடுக்கப்பட்ட
செய்தி அறியப் பெறுகிறது3, கோயில்
கணக்கர்களால் தவறிழைக்கப்பெற்ற கோயில்
நிலங்களைத்
______________
1-94 of 1908, 2-98 of 1908, 3-123
of 1908
|