பக்கம் எண் :

 தலங்களின் வரலாற்றுக் குறிப்புக்கள்135


திரும்பவும் அளந்துகட்டி மீண்டும் கோயிலுக்கே உரிமையாக்கியதாக இவனுடைய 23ஆம் ஆண்டுக் கல்வெட்டு அறிவிக்கிறது. தேவர கண்டன் மனைவியான அவனிமுழுதுடையாளால் திருமஞ்சன தீர்த்தத்திற்காக நான்கு தண்ணீர்ப் பானைகள் அளிக்கபெற்றன.

மாறன்சடையன்:

இவன் காலத்தில் 40 கழஞ்சு பொன் அளிக்கப்பெற்ற செய்தி அறிவிக்கப்பெறுகிறது1. நாகராஜதேவன் I (கி.பி. 985 - 1013) திருப்புத்தூர் சபையார் உறங்காப்புளி அடியில்கூடி ஏதோ தீர்மானித்ததாகத் தெரிகிறது. சிதிலமாதலின் முழுவரலாற்றுக் குறிப்பும் தெரியவில்லை2.

வீரபாண்டியன்:

திருத்தொண்டத் தொகைத் திருமடத்திற்குத் திருப்புத்தூர்ச் சபையார்கூடி இறையிலிசெய்ததை அறிவிக்கிறது. தயாபஞ்சகம் என்னும் மண்டபத்தைத் திருப்பணி செய்த வரலாறும் குறிக்கப் பெறுகிறது. தேனாற்றுப் பாசனமான கொறைக்குடியான் அவையன் பெரிய நாயனாரான விசயாலய தேவனால், யவனர்கள் ஆக்கிரமித்த கோயிலை வென்று திரும்பவும் பெற்றுப் புனிதப்படுத்தப்பெற்றது. இது நடைபெற்ற நாள் 2-8-1339 திங்கட்கிழமை என்று எபிகிராபிகா இண்டிகா பகுதி 11 பக். 138 கூறுகிறது. 2-12-1339 இல் அவையன் சொரக்குடி மாளவச்சக்ரவர்த்தியினால் பாடிக்காவல் உரிமைகள் விற்கப்பெற்றன. சில கோயில் நிலங்கள் அருச்சகருக்கு மானியமாக அளிக்கப்பெற்றன3.

விஜயநகர அரசரான கிருஷ்ணப்பதேவமகாராஜன் காலத்து சகம் 1432இல் பாண்டி மண்டலத்து கேரளசிங்க வளநாட்டுக் கிராமங்களான நாரணமங்கலம், காரையூர் என்ற இரண்டையும் நரசிம்மராய செல்லப்பரது சந்திக்காகக் கோயிலுக்கு அளித்தான். அவை இரண்டும் இப்பொழுது செல்லப்பாபுரம் என்று வழங்கப்படுகின்றன. அச்சுத தேவ மகாராயர் காலத்தில் அருவியூர் நகரமான குலசேகரப் பட்டினத்தான் ஒருவனால் விளக்கிற்காக நிலம் அளிக்கப்பெற்றிருக்கிறது4. பெரிய ராமப்பநாயகருக்கு நன்மை உண்டாக வயிரவருக்கு நிலம் அளிக்கப்பெற்றது. கிருஷ்ணராயர் காலத்து வீரநரசிம்மராய நாயக்கரான செல்லப்பர் நன்மைக்காகத் திருப்புத்தூர் உடையான் சிங்கம நாயக்கனால் நிலம் வழங்கப்பெற்றது5. நாகமநாயக்கர்

__________________

1-90 of 1908, 2-105 of 1908, 3-128 of 1908, 4-112 of 1908, 5-91 of 1908.