இராஜாதிராஜவளநாட்டு
திருவாலிநாட்டுத் திருப்புன்கூர் எனக்
குறிப்பிடப்பெற்றுள்ளது. பாண்டிய குலாசனி
வளநாட்டுக் கீழையூர் நாட்டுக் குறிச்சியான்
ஒருவன் சிவலோகமுடைய மாதேவர்
திருமஞ்சனத்திற்கும் திருமாலைக்குமாக
நிலமளித்திருக்கிறான்1. ஏனைய கல்வெட்டுக்கள்
விளக்கிற்காக நிலமளித்த செய்தியை அறிவிப்பன.
25.
திருச்சோற்றுத்துறை
சோழநாட்டுக்
காவிரித்தென்கரைத்தலம். தஞ்சாவூர் -
கண்டியூரிலிருந்து பேருந்து வசதி உள்ளது.
அருளாளர் என்னும்
அந்தண அன்பருக்கு அட்சயபாத்திரம் அளித்துப்
பஞ்சகாலத்தில் அடியார்களுக்கு அன்னமிட்டுக்
காத்த தலம். கௌதம முனிவர் தவஞ்செய்து
முத்திபெற்றமையால் கௌதமாஸ்ரமம் என்று
வழங்கப்படும். இந்திரன், சூரியன் முதலியோர்கள்
வழிபட்டு உய்ந்தனர். சூரியன் வழிபட்ட செய்தியை
"செங்கதிரோன் வணங்கும்
திருச்சோற்றுத்துறைநாதன்" என்னும்
நேரிசையால் அறியலாம். திருவையாற்று
சப்தஸ்தானஸ்தலங்களில் ஒன்று. இறைவன் பெயர்
தொலையாச் செல்வர். இறைவியின் பெயர்
ஒப்பிலாம்பிகை. வட மொழியில் முறையே
ஓதவனேசுவரர், அன்னபூரணி எனவும் வழங்கப் பெறும்.
தீர்த்தம் காவிரி.
கல்வெட்டு:
இத்தலத்தைப்
பற்றியதாக அரசியலார் படி எடுத்த கல்வெட்டுக்கள்
12; எம்.எஸ்.எஸ். எடுத்தன 27; வி.ரங்காச்சாரியா
எம்.ஏ. அவர்கள் எடுத்தது 25 ஆக 64 கல்வெட்டுக்கள் உள்ளன.
இவை பராந்தகன்,
இராஜராஜன் I, இன்னான் என்று கணித்தறியமுடியாத
கோராஜகேசரி, பரகேசரி, கோநேரின்மை
கொண்டான். குலோத்துங்கன் காலத்தன. இவை
பெரும்பாலும் சிதைவுற்றிருத்தலின் நிகழ்ச்சிகளை
நன்கு அறிந்து கொள்ளக்கூட வில்லை. ஆயினும்
விளக்குக்களுக்காகவும், நிவேதனத்துக்காவும்,
விழாவிற்காகவும் நிலமும் பொன்னும் அளித்த செய்திகள்
குறிக்கப்பெறுகின்றன.
ஒரு கல்வெட்டு
நடனமாதிற்குச் சர்வமான்யம் விட்ட செய்தியைத்
தெரிவிக்கிறது. நலமல்லூர் தேவர் என்பவர் தொலையாச்
_______________________
1 411 of 1918.
|