செல்வருக்கு
விளக்குத்தண்டு செய்ய நிலமளித்த செய்தி
தெரிகிறது. கடவுள் தொலையாச்செல்வர் என்றும்
திருச்சோற்றுத்துறை நாயனார் என்றுங்
குறிப்பிடப்பெறுகிறார்.
26. திருநறையூர்
சோழநாட்டுக்
காவிரித்தென்கரைத்தலம். கும்பகோணம்
நாச்சியார்கோயில் பேருந்தின் வழியே நறையூரை
அடையலாம்.
தலத்தின் பெயர்
திருநறையூர். ஆலயத்தின் பெயர் சித்தீச்சரம்.
சித்தர்கள் வழிபட்டுப் பேறுபெற்ற இடமாதலின்
இப்பெயர் பெற்றது. இறைவன் சித்திநாதர். அம்மை
அழகம்மை. பிள்ளையார் ஆண்ட பிள்ளையார். இங்கு
வழிபட்டுய்ந்தோர் குபேரன், தேவர்கள்,
கந்தருவர்கள் ஆகியோர். தீர்த்தம் பிரம
தீர்த்தம். இது கோயிலுக்கு வடபால் உள்ளது.
தேன்சித்தி தீர்த்தம் என்ற ஒன்றும்
உள்ளதென்பர்.
கல்வெட்டு:
இத்தலத்தில்
அரசியலார் படியெடுத்த கல்வெட்டுக்கள் 24 உள்ளன.
அவற்றுள், முதல் இராஜராஜன் காலமுதல்
குலோத்துங்கன் III காலம் வரையிலுள்ள
சோழமன்னர்களின் கல்வெட்டுக்கள்
காணப்படுகின்றன. கி.பி. 1118 முதல் 1135 வரை ஆண்ட
விக்கிரமனே இத்தலத்தில் மிக ஈடுபாடுடையவன்
என்பது தெரிகின்றது. இங்குக் குறிக்கப்பெற்ற
அரசர்கள் இராஜராஜன் I, வீரராஜேந்திரன் II,
குலோத்துங்கன் I, II, III, விக்ரமசோழன்,
இராஜராஜன் II, இராஜாதிராஜன் II. இவைகளில்,
இவ்வூர் க்ஷத்திரிய சிகாமணி வளநாட்டுத்
திருநறையூர் நாட்டுத் திருநறையூர் எனவும் அருண்
மொழித்தேவவளநாட்டுத் திருநறையூர் எனவும்,
விக்கிரமன் முதற் குலோத்துங்கன் இவர்கள்
காலத்துக் குலோத்துங்க சோழவள நாட்டுத்
திருநறையூர் எனவும் பஞ்சவன் மாதேவியான சதுர்வேதி
மங்கலத்துத் திருநறையூர் எனவும்
குறிக்கப்பெற்றுள்ளது.
சுவாமிபெயர்
சித்தநாதேஸ்வரமுடையதேவர் எனவும்
சித்தநாதேஸ்வரமுடையார் எனவும் வழங்கும்1.
இங்குள்ள பிக்ஷாடன தேவர் சிறப்புடையார்.
இவருக்குத் திருநறையூர்ச் சிவப்பிராமணர்
_________________
1 156 of 1908
|