பக்கம் எண் :

 தலங்களின் வரலாற்றுக் குறிப்புக்கள்139


ஒருவர் 30 காசு பொன்னை நிவேதனத்திற்காக அளித்தார்1. இங்கு வழிபாட்டிற்காக வரும் சிவயோகிகட்கு உணவுக்காக மண்ணி நாட்டுக்கருப்பூர் உடையான் ஒருவர் நிலம் விட்டார். இத்தலத்துள்ள பிடாரிகோயிலுக்கு நிலம்விட்ட செய்தியும் குறிக்கப்பெறுகிறது2. ஏனைய கல்வெட்டுகள் விளக்குக்காகவும் நிவேதனத்திற்காகவும் பலர் நிலமும் பொன்னும் அளித்ததை அறிவிக்கின்றன.

27. திருக்குரங்கணில் முட்டம்

இது தொண்டைநாட்டுத் தலங்களில் ஒன்று. காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி செல்லும் பேருந்துகளில் ஏறி, பாலாற்றைக் கடந்தவுடன் தூசி என்னும் இடத்தில் இறங்கி கிழக்கே 2 கி.மீ. சென்றால் கோயிலை அடையலாம்.

குரங்காகிய வாலியும், அணிலும், காகமும் வழிபட்டதால் இப்பெயர் பெற்றது. முட்டம் - காகம். இறைவன் திருநாமம் வாலி வழிபட்டதைக் காட்டும் சான்று. காக்கைமடு, காக்கை வழிபட்டதைக் காட்டுவது. மூன்றின் உருவங்களும் சுதையால் ஆலயவாயிலில் அமைக்கப் பெற்றிருக்கின்றன.

இறைவன் திருநாமம் வாலீசுவரர்; இறைவி திருநாமம் இறையார்வளையம்மை. இதனையே "இறையார் வளையாளை ஓர்பாகத்தடக்கி" எனப் பதிகம் அறிவிக்கிறது. தீர்த்தம் வாலி தீர்த்தம். இத்தலம் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலிலிருந்து தெற்கே 12 கி.மீ. தூரத்தில் பாலாற்றின் தென்கரையில் இருக்கிறது.

கல்வெட்டு:

இத்தலத்தைப் பற்றியனவாக 6 கல்வெட்டுகள் உள்ளன. அவை கோநேரின்மைகொண்டான், குலோத்துங்கன், இராஷ்டிரகூட கன்னரதேவன், கிருஷ்ணதேவராயர் இவர்கள் காலத்தன. அவற்றால் இத்தலம் காளியூர்க்கோட்டத்து இருகழிநாட்டு மாவண்டூர்ப்பற்றத்துப் பல்லவபுரமான திருக்குரங்கணில் முட்டம் என்று குறிப்பிடப் பெறுகிறது3. கடவுள் திருக்குரங்கணில் முட்டமுடைய நாயனார் என்றும், கொய்யாமலரீசுவர தேவர் என்றும் குறிப்பிடப்பெறுகிறார். பூஜா விருத்திக்காகச் சகம் 1451இல் கிருஷ்ணதேவ மகாராயர் பல்லவ

_________________________

1 161 of 1908, 2 175 of 1908, 3 290 of 1902.