புரம் கிராமத்தை
அளித்தார்1. இராஷ்டிரகூட கன்னரதேவன் ஸ்ரீ பலி
பூஜைக்காக நிலம் அளித்தான். சம்புவராயரால்
சத்திமங்கலமாகிற அம்மநல்லூர் கிராமத்தை
நிவந்தமாகவிட நீறணிந்தான் சேதுராயனுக்கு
உத்தரவிட்டான்2.
28. திருவிடைமருதூர்
இத்தலம்
மத்தியார்ச்சுனம் எனவும் வழங்கப்பெறும். வடக்கே
ஸ்ரீ பர்ப்பதமாகிய மல்லிகார்ச்சுனமும், தெற்கே
அம்பாசமுத்திரத்திற்கு அருகாமையிலுள்ள
திருப்புடைமருதூராகிய புடார்ச்சுனமும் விளங்க
இவற்றின் இடையில் இது விளங்குதலின்
இப்பெயர்பெற்றது. அர்ச்சுனம் - மருது. இம்
மூன்றுதலங்களுமே மருதைத் தலவிருட்சமாகக்
கொண்டிருப்பது அறியத்தக்கது.
இது சோழநாட்டில்
காவிரிக்குத் தென்கரையில் அமைந்து உள்ள தலம்.
மயிலாடுதுறை - கும்பகோணம் இருப்புப்பாதையில்
இரயில் நிலயம். மயிலாடுதுறை - கும்பகோணம்
பேருந்துச் சாலையில் உள்ளது.
வழிபட்டோர்
உமாதேவியார், விநாயகர், முருகன், விஷ்ணு, காளி,
இலக்குமி, சரஸ்வதி, வேதங்கள், மூன்றுகோடி
உருத்திரர், பன்னிரு சூரியர், வசிஷ்டர்,
அயிராவணமென்னும் யானை, சிவவாக்கியர், கபிலர்,
அகஸ்தியர், வரகுணதேவர், பட்டினத்தடிகள்
முதலியோர்.
வரகுணதேவ பாண்டிய
மன்னனுக்குப் பிரமகத்தி நீங்கிய தலம்.
இப்பிரமகத்தி இரண்டாங் கீழக்கோபுரத்து
வாயிலில் வலப்பக்கத்தில் இருக்கின்றது.
கிழக்குவாயிலில் பட்டினத்தடிகளும் மேற்கு
வாயிலில் பத்திரகிரியாரும் எழுந்தருளி
இருந்தனர். அம்மை மௌனமாய் இருந்து தவஞ்செய்த
மூகாம்பிகைசந்நிதி, அம்பாள் கோயில் வாசலில்
தனியே இருக்கிறது. பெரியபிராகாரத்திற்கு
அஸ்வமேத பிராகாரம் எனப் பெயர். அதனை
வலம்வரின் அஸ்வமேதயாகம் செய்தபலன்
சித்திக்கும் என்பது மரபு. பேய்பிடித்தவர்களும்
பைத்தியம் பிடித்தவர்களும் வலம்வந்தால் அவை
நீங்குகின்றன என்பது இன்றும் கண்கூடு. இத்தலம்
மகாலிங்கத்தலமாக, இதனைச் சுற்றி சிதம்பரம்
நடராஜர் சந்நிதியாகவும், ஆலங்குடி
தட்சணாமூர்த்தி
_____________________
1 295 of 1902. 2 291 of 1902
|