பக்கம் எண் :

142தலங்களின் வரலாற்றுக் குறிப்புக்கள்(முதல் திருமுறை)


பல கல்வெட்டுக்களால் திருமஞ்சனம் கொண்டுவர மண்குடங்கள் அளிக்கப்பெற்றமை அறியப்படுகின்றது. இதனால் அபிஷேகத்திற்கு மண் குடங்களினாலேயே தீர்த்தம்கொண்டு வந்தமை அறியலாம். விக்கிரமசோழன் 5 ஆம் ஆண்டில் மாணிக்கக் கூத்தர் கோயில் குறிக்கப்பெறுகிறது. இது நடராஜர் கோயிலோ இல்லையோ என்பது அறியக்கூடவில்லை. சோழர்கள் காலத்துச் சமயாசாரியரிடம் உள்ள அன்பைவிளக்கும் அறிகுறியாக அமைந்த அடையாளங்கள் பல. அவற்றுள் ஜெயங்கொண்ட சோழவளநாட்டின் திருவழுந்தூர் நாட்டின் விக்கிரம சோழன் ஆறலூரிலுள்ள வாணாதிராயன் என்பவன் ஆளுடைய பிள்ளையார் படிவத்தை அமைக்கப் பணங்கொடுத்தான்1. மேலும் ஆளுடையபிள்ளையார், ஆளுடையநம்பி இவர்களுடைய படிவத்திற்காக நிவேதிக்க வரியில்லாத நிலத்தை உய்யக்கொண்டான் வளநாட்டில் இருமரபுந்தூய பெருமாள் சதுர்வேதி மங்கலத்தில் அளித்தான்2. விக்கிரம பாண்டியன் சாந்திவிழா என்ற ஒன்று விக்கிரம பாண்டியன் காலத்தில் கொண்டாடப்பெற்றதாக அறிவிக்கிறது3. சிறப்பில் சிறப்பாக நாலாவது பிராகாரத்திலுள்ள மூகாம்பிகைபிடாரி, யோகிருந்த பரமேஸ்வரி என வழங்கப்பெறுகிறார்4.

ஏனைய கல்வெட்டுக்கள் விளக்கீட்டுக்காக அரசனும் அரசியும் நிலமும், பொன்னும், ஆடும் அளித்தமை அறிவிப்பன.

29. திருஅன்பிலாலந்துறை

சோழநாட்டுக் காவிரி வடகரைத்தலம். திருச்சிராப்பள்ளிக்கு அருகே லால்குடிக்குக் கிழக்கே 5 கி.மீ. தூரத்தில் கொள்ளிடத்தின் வடகரையில் உள்ளது. திருச்சிராப்பள்ளி, லால்குடி ஆகிய ஊர்களிலிருந்து பேருந்துகள் உள்ளன.

அன்பில் என்பது தலப்பெயர். ஆலந்துறை என்பது கோயில் பெயர். பிரமதேவர், வாகீச முனிவர் முதலியோர் பூசித்த தலம். இது கொள்ளிடக்கரையில் உள்ளது திருஞானசம்பந்தப் பெருமான் இத்தலத்தெழுந்தருளியிருந்தபோது, கொள்ளிடம் நீர்ப்பெருக்காய் இருந்ததாகவும், இக்கரையில் இருந்தே பாடியதாகவும், இறைவன் ஆணையின்வண்ணம் விநாயகர் காதைச் சாய்த்துக் கேட்டதாகவும் ஒரு கர்ணபரம்பரைச் செய்தியுண்டு. அதற்கேற்ப தலவிநாயகர்

___________________________

1 289 of 1907, 2 309 of 1907, 3 313 of 1907, 4 307 of 1907.