பக்கம் எண் :

 தலங்களின் வரலாற்றுக் குறிப்புக்கள்145


கல்வெட்டு:

இக்கோயில் முதன்முதல் பல்லவகாலப் படைப்பாக இருக்கலாம் என்பது துவாரபாலகர், கொடுங்கை, தூண் இவற்றைக் கொண்டு துணிகின்றனர். மூன்றாம் பிராகாரத்துக் கீழக்கோபுரம் விக்ரமசோழன் திருப்பணி. கி.பி. 1381 இல் செந்தலைக் கருப்பூர் கச்சிவீரப்பெருமான் மகனால் கோயில் திருமதில் மண்டபம் சீர்திருத்தப்பெற்றன. மேலக் கோபுரம், முதல் பிராகாரத்துத் திருமாளிகைப் பத்தி, மூன்றாம் பிராகாரத்துத் தெற்குக் கோபுரம், இடைமருதூர் ஆனையப்ப பிள்ளையாலும், அவர் தம்பி வைத்யநாத அண்ணன் என்பவராலும் எடுப்பிக்கப் பெற்றன. காவிரி பூசப்படித்துறை கட்டியவர்களும் இவர்களே. படித்துறைக்கு அவர்கள் வைத்த பெயர் கல்யாண சிந்து என்பதாம்.

அம்மை பெயர் திருக்காமக்கோட்டத்து ஆளுடைய நாச்சியார், உலகுடைய நாச்சியார் என்பன.

இத்தலம் முதல் இராஜராஜன் காலத்து இராஜேந்திர சிங்க வளநாட்டுப் பொய்கைநாட்டுத் திருவையாறு எனவும், மூன்றாங் குலோத்துங்கன் காலத்தில் புவனமுழுதுடையான் வளநாட்டுப் பொய்கை நாட்டைச் சேர்ந்ததாகவும், சடாவர்மன் சுந்தரபாண்டியன் காலத்து, இராஜராஜ வளநாட்டுப் பொய்கைநாட்டைச் சேர்ந்ததாகவும் குறிக்கப் பெறுகின்றது. இது இன்ன கூற்றத்தைச் சார்ந்தது எனக் குறிக்கப் பெறாமையின் தனியூராக இருக்கலாம் எனத் தெரிகிறது.

ஓலோகமாதேவீச்சரம்; இது உத்தரகைலாசம் எனவும் வழங்கும். இதனைக்கட்டியவர் முதலாம் இராஜராஜனது மனைவியாராகிய தந்திசத்திவிடங்கியாரான ஒலோகமாதேவியார். ஆதலால் இக்கோயில் கி.பி. 1006-இல் கட்டப்பெற்றிருக்கலாம். இங்குள்ள சோமாஸ்கந்தர்க்கு ஒலோக வீதி விடங்கர் எனப்பெயர். இதில் சித்திரைப் பெருவிழா, சதயவிழா கொண்டாடப்பெற்றன.

தென்கயிலாயம்: இதனைத் திருப்பணிசெய்தவர் முதலாம் இராஜேந்திரன் மனைவியான பஞ்சவன்மாதேவியார். இறைவன் பெயர் பஞ்சநதிவாணன். இறைவி அஞ்சலை.

பராந்தகன் I விளக்குப்பல இட்டுவரவும் பொன், வெள்ளி விளக்குக்கள் வைக்கவும், நிபந்தங்கள் அளித்தான், 1இராஜராஜன் I,

______________________

1 223 to 227, 231 to 236 of 1844.