கல்வெட்டு:
படியெடுத்தன ஒன்பது
உள்ளன. இராஜேந்திரன் III காலத்தன மூன்று.
குலோத்துங்கன் காலத்தன இரண்டு. இராஜராஜன் III
காலத்தன இரண்டு. சுந்தரபாண்டியன் காலத்தன இரண்டு.
இத்தலம் அருமொழித் தேவ வளநாட்டு வலிவலக்
கூற்றத்து உபயகுல சுத்த சதுர்வேதி மங்கலமான
வலிவலம் என்று வழங்கப்பட்டது1. இறைவன் மனத்துள்
தேவர் என்றே கல்வெட்டுகளில்
அழைக்கப்படுகிறார். உடையார் மனத்துள் நாயனாரது
கோயில் காரியம் பார்ப்பார் சிலரால்
தேவப்பெருமான் திருமடத்து எதிர் ஒப்பிலாதார்
சோமநாத தேவ முதலியாருக்கு நிலம் மாற்றிக்
கொடுக்கப்பட்டது2. இந்தத் திருமடம் மனத்துள்
நாயனார் கோயிலுக்குத் தெற்குப் பக்கத்தில்
இருக்கிறது3. தென் விடங்கலூர், குலோத்துங்க சோழ
நல்லூர் திரிசூலம், பொன் வேய்ந்த பெருமாள்
நல்லூர் முதலிய கிராமங்கள் பல வேறு
காரியங்களுக்குத் தானமாக அளிக்கப்பெற்றமை
அறியப் பெறுகின்றன. திருமூல தேவர் திருமடத்தில்
இருந்த கோயில் அர்ச்சகர் ஒருவருக்கு நிலம்
விற்கப்பெற்றது என்பதால் திருமூலதேவர் மடம்
என்பது ஒன்று இருந்தமை புலனாகும்4.
43. திருச்சோபுரம்
நடுநாட்டுத்தலம்.
சிதம்பரம் - கடலூர் இருப்புப்பாதையில்
ஆலப்பாக்கம் இரயில் நிலையத்துக்குக் கிழக்கே
உள்ளது. இவ்வழியில் பேருந்துகளிலும் ஆலப்பாக்கம்
வரலாம். ஆலப்பாக்கத்திற்குக் கிழக்கே 2 கி.மீ.
தூரத்தில் சோபுரம் உள்ளது. சாலை வசதி உள்ளது.
இது இப்பொழுது
தியாகவல்லி என வழங்குகிறது. முதற் குலோத்துங்கன்
மனைவி மூவருள் பட்டத்து மனைவியாகிய
தியாகவல்லியால் திருப்பணி செய்யப்
பெற்றமையின் இப்பெயர் பெற்றது போலும்.
அகஸ்தியர் பூசித்த தலம். சமீபகாலம் வரையில்
கடற்கரை மணலால் மூடப்பட்டு மேடாய் இருந்தது. ஒரு
துறவி கருப்பக்கிருகத்தின் கல்ஸ்தூபி மணலில்
காணப்படத் தோண்டி, ஊரவர் உதவியைக்கொண்டு
வெளிப்படுத்தினர். பரிவாரங்களுடன் ஆலயம்
முழுவதும் மணலிலிருந்து தோண்டப்பட்டது. சில
அறிகுறிகளால் நகரமே புதையுண்டிருக்க வேண்டுமென்று
தெரிகிறது.
_____________________________
1 110 of 1911, 2 108 of 1911, 3
109 of 1911, 4 116 of 1911.
|