பக்கம் எண் :

 தலங்களின் வரலாற்றுக் குறிப்புக்கள்159


சுவாமிபெயர் சோபுரநாதர். அம்மைபெயர் சோபுரநாயகி. தீர்த்தம் பரம தீர்த்தம்.

கல்வெட்டு:

கல்வெட்டுக்கள் ஐந்து உள்ளன. இங்கே நர்த்தனகணபதி கோயில் இருந்ததாகவும், அதற்குச் சுந்தர பாண்டியன் நிலம் அளித்ததாகவும் அறியப்படுகிறது. 1இராஜராஜ தேவர், சாரிபுத்த பண்டிதர், மாறவர்மன் சுந்தரபாண்டியன் I, கோநேரின்மைகண்டான், சுந்தர பாண்டிய தேவர் இவர்கள் பெயர்கள் குறிப்பிடப்பெறுகின்றன.

44. திருநெடுங்களம்

சோழநாட்டுக் காவிரிதென்கரைத்தலம். திருச்சிராப்பள்ளிக்குக் கிழக்கே உள்ளது. பேருந்து வசதி உள்ளது தஞ்சை - திருச்சி பேருந்து வழியில் துவாக்குடி வந்து அங்கிருந்து வடக்கே செல்ல வேண்டும்.

திருநெட்டான்குளம் என இக்காலத்து வழங்கும். வங்கிய சோழன் பூசித்துப் பேறுபெற்ற தலம். சுவாமி நித்தியசுந்தரர். தேவி ஒப்பிலாநாயகி, தீர்த்தம் சுந்தரதீர்த்தம்.

கல்வெட்டு:

இத்தலத்தைப் பற்றிய கல்வெட்டுக்கள் 34 உள்ளன. அவை சுந்தரபாண்டியன் காலத்தன மூன்றும், கரிகாலன் காலத்தது ஒன்றும், ஸ்ரீவல்லபதேவனது ஒன்றும், இராஜகேசரிவர்மன் காலத்தன ஒன்பதும், 3ஆம் இராஜராஜன் கல்வெட்டு இரண்டும், ஹொய்ஸள வீரராமநாத தேவரது ஒன்றும், திரிபுவன வீரதேவனுடையன இரண்டும், பரகேசரிவர்மனென்று மட்டும் குறிப்பன மூன்றும், விஜயநகர அரசர்களுடையன ஐந்தும், நாயக்க மன்னரது ஒன்றும் ஏனைய அறியப்படாதனவுமாக அமைந்தன.

இத்தலம் சுந்தரபாண்டியன் காலத்து பாண்டிய குலபதி வடகரைநாட்டுத் திருநெடுங்களம் என்றும்2, இராஜராஜ தேவன் III காலத்து பாண்டியகுலாசனி வளநாட்டு வடகாவிரிநாட்டுப்

____________________

1 114 of 1904. 2 627 of 1909.