பக்கம் எண் :

160தலங்களின் வரலாற்றுக் குறிப்புக்கள்(முதல் திருமுறை)


பிரமதேயம் தியாகவல்லி சதுர்வேதி மங்கலமான திருநெடுங்களம் என்றும் குறிக்கப்பெறுகிறது. இறைவன் திருநெடுங்களமுடைய நாயனார்1, நெடுங்களமுடையார், உலகாண்டேசுவரமுடையார்2, களந்தை நாயகர்3, திருநெடுங்களமுடைய தம்பிரானார்4, நிழலார் சோலை வளமுடையநாயனார்5, திருநெடுங்களத்து ஆள்வார்6 என்றெல்லாம் வழங்கப்பெறுகிறார்.

இவ்வரசர்கள் அனைவரும் கோயிலுக்குப் பொன்னும், நெல்லும், நிலமும் அளித்த செய்தி அறிவிக்கப்பெறுகின்றன. அரசர்களேயன்றி, அரசருடைய தண்டல் நாயகர்களும், அரசகாரியம் பார்ப்பவர்களும், மனைவியார்களும் அறம் செய்துள்ளனர். இராஜகேசரிவர்மன் மூன்றாமாண்டில் உறையூர் உடையான் ஒருவனால் லோகசுந்தரத் திருப்படிமம் பிரதிஷ்டை செய்யப்பெற்றது7, பிள்ளையார் கணபதி கோயிலுக்கு விளக்கீடு செய்வித்தான் இராஜகேசரி வர்மன் I (கி.பி. 985-1013). பித்தளையால் செய்யப்பட்டு பொன்முலாம் பூசப்பெற்ற மத்தளி ஒன்றைக் கம்பன் மணியனான விக்கிரமசிங்கன் மூவேந்த வேளாளன் என்பான் ஸ்ரீபலி உபயத்திற்காகச் செய்து கொடுத்தான்8. இக்கோயிலில் முழுக்குடி அரசன் வல்லபதேவன் அரங்கமண்டபம் கட்டிக்கொடுத்தான்9.

45. திருஓத்தூர்

தொண்டை நாட்டுத்தலம். வடார்க்காடு மாவட்டம் செய்யாறுக்கு அருகில் உள்ளது. காஞ்சிபுரத்திலிருந்து பேருந்துகளில் செல்லலாம்.

இது திருவத்தூர் என வழங்குகிறது. இறைவன் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் வேதத்தை அருளிச்செய்தமையால் இப்பெயர் பெற்றது. சம்பந்தசுவாமிகள் எழுந்தருளியபோது கோயிலைப் பராமரித்துவந்த சிவனடியார் ஒருவர் கோயில் நிலங்களில் பனைவைத்து வளர்த்தார். அவை ஆண்பனையாயின. சமணர்கள் பரிகசித்தனர். அதைக்கண்டு இவர் வருந்திச் சுவாமிகளிடம் விண்ணப்பித்தார். திருஞானசம்பந்தர் பதிகம்பாடி, திருக்கடைக்காப்பில் ‘குரும்பை ஆண்பனை ஈன்குலை ஓத்தூர்’ என்று அருளிய போது அவை பெண்பனைகளாயின. ஆலயத்தில் பனை

__________________________

1 667 of 1909, 2 679 of 1909, 3 692 of 1909, 4 693 of 1909, 5 793 of 1909, 6 682 of 1909, 7 682 of 1909, 8 691 of 1909, 9 692 of 1909.