பக்கம் எண் :

172தலங்களின் வரலாற்றுக் குறிப்புக்கள்(முதல் திருமுறை)


மூலலிங்கம் தீபஒளி பிரதிபலிக்கக் கூடிய மரகதலிங்கம். சம்பந்த சுவாமிகள் தூரத்தே எழுந்தருளும்போது திருமேனிச் செம்மைகண்டு "இடைச்சுரமேவிய இவர் வணம் என்னே" என்று வியந்துள்ளார். இறைவன் இடைச்சுரநாதர், ஞானபுரீசுரர். இறைவி இமய மடக்கொடியம்மை.

கல்வெட்டு:

சோழ அரசன் குலோத்துங்க சோழதேவன் ஆட்சியில் ஜயங்கொண்ட சோழ மண்டலத்திலுள்ள களத்தூர்க் கோட்டத்தின் பகுதியான வளநாட்டிலுள்ள திருவிடைச்சுரம் என்று1 குறிக்கப்பட்டுள்ளது. இறைவன் பெயர் திருவிடைச்சுரமுடைய நாயனார்; திருவிடைச்சுரம் உடையார் என்றும், வழங்கப்பெறும். இங்கு ஜனனபுரீசுவரர் கோயில் ஒன்று உள்ளது. மேலும் கோவர்த்தன அம்பாள் திருக்காமக் கோட்டமுடைய பெரிய நாச்சியார் உருவம் நிறுவ, பெருந்தண்டிலத்திலுள்ள கருப்பக்கிருகம் கட்டப்பட்டதையும் கூறுகிறது2. இந்த இறைவி கருப்பக்கிருகத்திற்கு விளக்குப்போட, ஆவன செய்யப்பட்டுள்ளது3. மகாமண்டலேசுவர குமார ஜலகராஜ திருமலையதேவ மகாராயரால் விளக்குக்காகவும் படையலுக்காகவும் நிலம் கொடுக்கப்பட்டது4. பிள்ளையார் நீலங்கநாயனாரைப் பற்றி5 விவரிக்கின்றது.

ஏனையவை விளக்கிற்காகவும் பிறவற்றிற்காகவும் பொன், நிலம், ஆடுகள், பசுக்கள் இவைகள் அளிக்கப்பட்டமையை அறிவிக்கின்றன.

55. திருக்கழுக்குன்றம்

தொண்டை நாட்டுத்தலம். இத்தலம் செங்கற்பட்டிலிருந்து தென்கிழக்கே 14 கி.மீ. தூரத்தில் உள்ளது. பேருந்துகள் உள்ளன.

கழுகுகள் பூசித்துப் பேறுபெற்றமையின் கழுக்குன்றம் எனப்பெறும். முதல் யுகத்து, சாபமெய்திய சண்டன், பிரசண்டன் என்னும் கழுகுகளும், இரண்டாம் யுகத்து, சம்பாதி, ஜடாயு என்னும் கழுகுகளும், மூன்றாம் யுகத்து, சம்புகுத்தன், மாகுத்தன் என்னும் கழுகுகளும், நான்காம் யுகத்து சம்பு, ஆதி என்னும் கழுகுகளும் பூசித்து முறையே

___________________________

1335 of 1908, 2346 of 1908, 3347 of 1906, 4337 of 1908, 5342 of 1908.