பேறுபெற்றன. வேதங்கள்
மலையுருவாய்ச் சுவாமியைத் தாங்கலின் வேதகிரி
எனவும் வழங்கும். வடதேசத்தினர் பட்சி தீர்த்தம்
என்பர். இன்றும் இரண்டு பட்சிகள் தினந்தோறும்
அன்னத்தை உண்டு வலம் வருகின்றன. 12 ஆண்டுக்கொருமுறை
சங்கு பிறத்தலின் சங்கு பிறந்த குளம் என்னும் மகிமையைப்
பெற்றுள்ளது. மாணிக்க வாசக சுவாமிகளுக்கு
இறைவன் குருமூர்த்தி வடிவமாய்த் தரிசனங்கொடுத்த
தலம். இவரன்றி நந்தி, இந்திரன்,
கோடிருத்திரர் முதலியோர் பூசித்துப் பேறு பெற்றனர்.
இறைவன் வேதபுரீசுவரர். இறைவி பெண்ணினல்லாளம்மை,
மலைச்சொக்கநாயகி. அடிவார இறைவன் பெயர் பக்தவத்சலர்.
இறைவி திரிபுரசுந்தரி. தீர்த்தம் சங்கு பிறந்த
குளம், சங்க தீர்த்தம், பட்சி தீர்த்தம்.
கல்வெட்டு:
பாண்டிய மன்னன் ஜடாவர்மன்
என்கிற திரிபுவனச் சக்ரவர்த்தி வீரபாண்டியதேவன்
காலத்தில் செயங்கொண்ட சோழ மண்டலத்தில் களத்தூர்
கோட்டத்துத் திருக்கழுக்குன்றம் என்றும்1,
சோழர் காலத்தில் களத்தூர் கோட்டத்தில் களத்தூர்
நாட்டிலுள்ள உலகளந்த சோழபுரம் என்றும் வழங்கப்பெற்றது.
இறைவன் திருக்கழுக்குன்றமுடைய நாயனார்2 என்று வழங்கப்படுவர்.
சண்முகப் பிள்ளையார் குறிக்கப்பட்டுள்ளார்3.
இராஷ்டிரகூட அரசன் கன்னரதேவன் காலத்தில் கருப்பக்கிருகத்தின்
முன் மண்டபங்கட்ட ஈசானசிவாவிடமிருந்து ஒருபட்டி நிலம்
வாங்கப்பட்டது4. இராஜராஜ புரத்தில் வசிக்கும்
ஒருவர் 10 காசுகள் கொடுக்கத் தான் வாங்கின நிலத்தை
63 நாயன்மாரில் ஒருவரான நமிநந்தியடிகள் பிதாவிடம்
கொடுத்துள்ளார்கள்5. பக்தவத்சலக் கோயில்
குன்றத்தின் மேலுளதாக6 இரண்டு கல்வெட்டுகள் அறிவிக்கின்றன.
கோயிலைப் பழுதுபார்க்க விஜயநகர அரசன் பிரதாபபுக்கராயர்
நிலம் தந்துள்ளார். மேலும் தம் பெயரராகிய
புக்கராயன் சந்தி விழாவிற்காகவும் நிலம் தானம்
செய்துள்ளார்7. ஆயிரப்பிரிவிலுள்ள மக்களால்
திருமலை ஆளுடை நாயனார் கோயிலுக்கு நிலம் தானம் செய்யப்பட்டுள்ளது8.
களத்தூர் பிரிவிலுள்ள மக்களால் அதே கோயிலுக்கு
காளிங்கராயன் சந்தி விழாவிற்காக நிலம் தானஞ்செய்யப்பட்டது9.
மாறவர்மன் திரிபுவனச் சக்ரவர்த்தி வீரபாண்டியதேவன்
காலத்தில் ஒரு நபரால் சண்முகப் பிள்ளையார் கர்ப்பக்கிருகத்திற்கு
விளக்கிடப் பசுக்கள் தானஞ் செய்யப்
____________________________
1 59 of 1909, 2 61 of 1909,
3 62 of 1909, 4 170 of 1894, 5 179 of 1894, 6 189 of 1894,
57 of 1909, 7 57 of 1909, 8 58 of 1909, 9 59 of 1909.
|