பட்டுள்ளன1. விஜய
நகர அரசன் வீரவிஜய பூபதிராயரது ஆட்சியில்
அரசனுடைய அதிகாரியான நாகேசுவரமுடையான்
விழாவிற்காக வரியைத் தள்ளுபடி செய்துள்ளான்2.
17ஆம் நூற்றாண்டின் மத்தியில் ஒல்லாந்து நாட்டு
அதிகாரிகளைப்பற்றிய அடையாளச் செய்திகள்
குன்றின் ஒருகால்மண்டபத்தின் கீழ்த்தாழ்வாரத்தின்
8 சுவர்களின் மேல்பொறிக்கப்பட்டுள்ளன3.
இவையன்றி விளக்கு முதலானவற்றுக்குப் பொன், நிலம்,
ஊர், ஆடுகள், பசுக்கள் முதலியன அளிக்கப்பட்ட
செய்திகளும் அறியப்படுகின்றன.
56. திருக்கானூர்
சோழநாட்டுக்
காவிரி வடகரைத்தலம். இது பூதலூர் இரயில் நிலையத்திலிருந்து
வடக்கே 3 கி.மீ. தூரத்தில் உள்ளது.
பேருந்தில் வருவோர் திருக்காட்டுப்பள்ளியை
அடைந்து அங்கிருந்து செல்ல வேண்டும்.
உமாதேவியார்
சிவயோகத்து எழுந்தருளியிருந்தபோது இறைவன் செந்தீவண்ணராகத்
திருவுருக்காட்டிய தலம். இதனை அப்பர்சுவாமிகள் ‘கானூரில்
பரமனாய பரஞ்சுடர்’ என்பார்கள்.
சுவாமி செம்மேனிநாதர். அம்மை சிவயோகநாயகி.
தீர்த்தம் கொள்ளிட
நதி.
கல்வெட்டு:
இத்தலம் வடகரை இராஜராஜவளநாட்டுப்
பொய்கையூர் நாட்டுப் பணிபதிமங்கலமாகிய கரிகாலசோழ
சதுர்வேதி மங்கலத்துத் திருக்கானூர் என்று குறிக்கப்படுகிறது.
சுவாமி பெயர் இட்சுபுரீசுவரர் என்று கல்வெட்டுக்
குறிப்பாளர் எழுதுகிறார். கி. பி.
1268-1308 ஆண்ட மாறவர்மன் குலசேகரதேவன் ஏதோ நிவந்தம்
அளித்திருக்கிறான். பெரிய நப்பனான உத்தம
சோழ நாடாள்வான் கிராமக் காவலனாக இருந்தான்.
இராஜாதி ராஜதேவனுடைய நான்காம் ஆண்டுக் கல்வெட்டொன்றில்
கரிகாற் சோழீசுரமுடைய மகாதேவர் கோயில் ஒன்று
குறிக்கப்படுகிறது. இங்கே திருமேற்கோயில்
என்னும் விஷ்ணு கோயில் இருந்ததையும் அது
குறிப்பிடுகிறது4.
__________________
1 62 of 1909, 2 63 of 1909,
3 66 to 73 of 1909, 4 164 of 1911.
|