அண்மையில் இருப்பதால்
இங்கு வழிபட வந்த அப்பர் அடிகள் இத்தலப் பதிகத்து
அப்பூதிநாயனார் திருப்பெயரை அமைத்து அருளிச்செய்தார்கள்.
விடந்தீர்த்த பதிகமாகிய "ஒன்று கொலாம்"
என்ற பதிகநிகழ்ச்சிக்கு இடமானதலம் இது.
இறைவன் பெயர் ஆபத்சகாயர். அம்மையின் பெயர்
பெரிய நாயகி. தீர்த்தம் - காவிரி.
கல்வெட்டு:
இத்தலத்தைப்பற்றிய
கல்வெட்டுக்கள் 29 உள்ளன. இவைகளும் முதற்பராந்தகன்
காலமுதற்கொண்டே தொடங்குகின்றன. இவற்றால்
அரசர்களும் அரசியர்களும், அவர்களது தோழிமார்களும்,
தண்டத் தலைவர்களும் விளக்கிற்காக நிலமும் நெய்யும்,
பொன்னும் வழங்கியமை அறியலாம். திரிபுவன
வீரதேவனான மூன்றாம் குலோத்துங்கன் சிந்திநல்லூரில்
உள்ள நிலங்களை 15500 காசுகளுக்கு விற்று, அதைக்
கோயிலுக்குக் கொடுத்தான். இராஜராஜன் மூன்று
காணி ஒரு முந்திரி நிலம் அளித்தான் என்பதால்
அரசர்களின் அன்பின் நுணுக்கம் அறியப்பெறுகிறது.
கோஇராஜகேசரிவர்மன் காலத்தில் ஒரு வேளாளன் கல்மண்டபம்
ஒன்றை எழுப்பித் தந்தான்.
59. திருப்பராய்த்துறை
சோழநாட்டுக்
காவிரித் தென்கரைத்தலம். திருச்சிராப்பள்ளியிலிருந்து
குளித்தலை செல்லும் பேருந்து வழியில் உள்ளது. இத்தலம்
இந்திரன், குபேரன், சப்தரிஷிகள் இவர்களால் பூசிக்கப்பெற்றது.
அகண்ட காவிரித்துறையில் உள்ளது. இதனை அப்பர் சுவாமிகள்
‘பரக்குநீர்ப்
பொன்னி மன்னுபராய்த் துறை’ என்று
அருளுவார்கள். இறைவன் பெயர் பராய்த்துறை நாதர்.
தேவியார் பெயர் மயிலம்மையார், தீர்த்தம்
காவிரி. விருட்சம் பராய். விருட்சத்தால் இத்தலத்திற்குப்
பெயராயிற்று. திருச்சி - ஈரோடு இரயில் பாதையில்
இரயில் நிலையம் உள்ளது.
கல்வெட்டு:
மதுரைகொண்ட கோப்பரகேசரி
வர்மரான முதற்பராந்தகன் காலத்திய கல்வெட்டுக்கள்
மிகுதியாக உள்ளன. இன்னாரது என்றறியமுடியாத இராஜகேசரிவர்மன்
காலத்திய கல்வெட்டுக்களும் சில உள்ளன.
அவையன்றிச் சுந்தரபாண்டியத்தேவர், கோநேரின்மை
கொண்டான். கிருஷ்ணதேவ மகாராயர் கல்வெட்டுக்களும்
இன்னாரென்று அறியமுடியாத சில கல்வெட்டுக்களும் உள்ளன.
எல்லாமாக
|