சுந்தரப்பெருமாள்
கோயிலுக்குத் தெற்கே 3 கி.மீ. தூரத்தில்
உள்ளது. திருவாவடுதுறை ஆதீன அருளாட்சியில் உள்ளது.
கல்வெட்டு:
இத்தலம் ஹொய்சள
அரசரான வீர ராமநாததேவரின் 23 ஆவது ஆட்சியில் நித்தவிநோத
வளநாட்டு நல்லூர்நாட்டுப் பஞ்சவன் மாதேவி சதுர்வேதி
மங்கலமாகிய திருநல்லூர் என்று வழங்குகிறது.
இறைவன் திருநல்லூர்
நாயனார் என்று வழங்கப்படுகிறார். இத்தலவிநாயகர்
அகம்படிவிநாயகர் என்று குறிக்கப்படுகிறார்.
நாராயணன்மேகவீரன் என்பவன் ஒரு மண்டபங்கட்டினான்.
ஏனைய கல்வெட்டுக்கள் நிவேதனத்திற்கு நெல்லும்,
நிலமும், விளக்கிற்குப் பொன்னும் பூந்தோட்டத்திற்கும்,
பூக்கட்டவும் நிலமும் பொன்னும் அளித்த செய்தியை
அறிவிக்கின்றன. இராஜேந்திர சோழதேவனின்
5ஆம் ஆண்டுக் கல்வெட்டொன்று கோயிலில் அடித்தளம்
அமைக்க நிலம் வழங்கியதைத் தெரிவிக்கின்றது.
62. கோயில் (சிதம்பரம்)
தலம்:
இத்தலம் சிதம்பரம்
என வழங்கப்படுகின்றது. சோழ நாட்டுக் காவிரி
வடகரைத்தலம். சென்னை - திருச்சி நேர் வழி
இருப்புப் பாதையில் சிதம்பரம் இரயில் நிலையம்
உள்ளது. தமிழகத்தின் அனைத்து நகர்களிலிருந்தும்
பேருந்துகள் உள்ளன. தில்லை, சிதாகாசக்ஷேத்திரம்,
பெரும்பற்றப்புலியூர் என்பன இதன் மறுபெயர்கள்.
மைத்ரேய உபநிஷதம் "இருதயாகாச மயம் கோசம்
ஆனந்தம் பரமாலயம்" எனக் குறிப்பிடுகின்றது.
திருமந்திரத்தில் திருவம்பலச்சக்கரம், திருக்கூத்து,
சிதம்பரம் முதலியன குறிப்பிடப்படுவதால் இதன்தொன்மை
விளங்கும். கீஸ்ட் லிச் பேராசிரியர் கி.பி.
5 ஆம் நூற்றாண்டு முதல் 10, 11 வரையில் கட்டப்பட்டுள்ள
கட்டடங்கள் இங்கு இருக்கின்றன என்கிறார்.
மூர்த்திகள்:
திருமூலட்டானேசுரர்,
உமையம்மை, முக்குறுணிவிநாயகர், கற்பகவிநாயகர்,
பாண்டியநாயகம், அம்மன், நவலிங்கம்,
துர்க்கை
|