பக்கம் எண் :

180தலங்களின் வரலாற்றுக் குறிப்புக்கள்(முதல் திருமுறை)


முதலியன மிக விளக்கம் வாய்ந்தவை. வைஷ்ணவத்தில் திருச்சித்திரகூடம் என வழங்கும். பெருமாள் தில்லைக் கோவிந்தராசர். தாயார் புண்டரீகவல்லித்தாயார். ஐந்து சபைகளுள் இது கனகசபை. இத்தலத்திலேயே ஐந்து சபைகள் உள்ளன. அவை சிற்சபை (இது நடராசப் பெருமான் இருக்குமிடம்), ராஜசபை (ஆயிரங்கால் மண்டபம்), கனகசபை (சிற்சபைக்கு முன்னால் உள்ள பகுதி), நிருத்தசபை (நடராசப் பெருமானின் கொடி மரத்திற்கருகிலுள்ளது), தேவசபை (பேரம்பலம்) என்பன.

இத்தலத்துச் சிறப்புடைக் கடவுள் ஆனந்த நடராசர். அவருடைய திருமேனி முழுவதும் பஞ்சாக்கரவடிவம். அவருடைய திருக்கூத்து ஒரேகாலத்தில் ஐந்தொழிலையும் ஆற்றுவது.

தீர்த்தங்கள்:

சிவகங்கை, பரமானந்தகூபம், புலிமடு, வியாக்கிரபாத தீர்த்தம், ஆனந்தத் தீர்த்தம், நாகசேரி, பிரமதீர்த்தம், சிவப்பிரியை, திருப்பாற்கடல் முதலியன. இறைவன் ஊர்த்துவதாண்டவமாடத் தோற்ற காளியின் கோயில் இந்தச் சிவப்பிரியைத் தீர்த்தத்தின் கீழ்க்கரையில், சிதம்பரத்தின் வடஎல்லையில் இருக்கிறது.

தலவிருட்சம் ஆல். இது இன்று இல்லை. தில்லைவனம் என்ற பெயரால் தலவிருட்சம் தில்லை என்பாருமுளர்.

கல்வெட்டு:

சிதம்பரம் ஒரு தனியூராக அரசன் நேர்பார்வையில் இருந்துவந்தது. இதனைச்சூழப் பதினான்கு சிற்றூர்கள் இருந்தனவாகக் குறிக்கப்பட்டுள்ளன. இத்தலத்தின் பழைய பெயர் சிற்றம்பலம்1. புலியூர், பெரும்பற்றப்புலியூர், பொற்புலியூர், தில்லை, தில்லையூர், கோயில் என்று கல்வெட்டுக்களில் வழங்கப்படுகிறது2 தில்லையின் தேவகாரியக் கண்காணிப்பாளர்களே சோழநாடு முழுமைக்கும் தேவாலயக் கண்காணிப்பாளராக இருந்துவந்தனர். சோழமன்னர்களுக்கு முடி சூட்டும் உரிமை தில்லை தேவகாரியக் குழுவினர்க்கே இருந்தது.

கல்வெட்டுகளில் மிகப் பழமையானதாகிய இராஜேந்திர சோழ தேவனுடைய 24ஆம் ஆண்டுக் கல்வெட்டும், குலோத்துங்க

_________

1 A.R. of 1914. para 13. 2 A.R. 117 - of 1888.