சிதம்பரம் திருக்கோயிலைக்
கண்காணித்தவர்களாக 1. தொண்டைமான் 2. திருவையாறுடையான்
3. மதுராந்தகப்பிரமராயன் 4. தில்லையம்பலப்
பேரரையன் 5. விழிஞத்தரையன் 6. இராஜராஜ
விழுப்பரையன் 7. சித்தரையன் 8. வில்லவரையன்
9. அங்கராயன் 10. சிங்களராயன் விஜயராயன்
12. மூவேந்தரையன் 13. வாணதரையன் 14.
வயல்நாட்டரையன் 15. பொத்தப்பிச்சோழன் 16.
காரணைவிழுப்பரையன் 17. குருகுலராயன் 18.
மழவராயன் 19. காடுவெட்டி 20. வயிராதிராயன்
21. விலாடராயன் 22. விக்ரம சோழப்பிரமராயன்
23. விளநாடுடையான் 24. நிகரில்சோழப் பல்லவரையன்
25. குலோத்துங்க சோழவாணகோவரையன் 26. எதிரில்சோழவேளான்
27. நரசிம்மவர்மன் 28. பாண்டியராயன் 29.
மலையப்பிராயன் 30. வேணாடுடையான் என்பவர்கள்
குறிக்கப்படுகிறார்கள்.
கிழக்கு, தெற்கு,
மேற்குக் கோபுரங்களை முடிசூடிய மன்னர்கள் கட்டியதாகவும்,
வடக்குக்கோபுரத்தைக் கடவுள் தானே கட்டிக் கொண்டதாகவும்,
S.I.I.,374-1913 கல்வெட்டுப் பாட்டொன்று
அறிவிக்கிறது. இவ்வடக்குக் கோபுரத்தைக்
கிருஷ்ணதேவராயன் தொடங்கி நிலைமட்டம் வரையிலோ,
அல்லது அதற்கு மேலுமோ நிறுத்தியதாகவும், அச்சுத
தேவராயன் இதனை முற்றுப் பெறுவித்தாகவும் கல்வெட்டுக்களால்
யூசிக்க இடந்தருவதால் கடவுள் தானே கட்டிக்கொண்டார்
என்று கல்வெட்டு உபசாரமாகக் கூறுகிறது போலும்.
தெற்குக்கோபுரம் கோப்பெருஞ்சிங்கனால் கட்டப்
பட்டது. இவனுக்கு அழகிய சிங்கன் என்ற மற்றொரு
பெயருமுண்டாதலால் இக்கோபுரம் சொக்கசீயம் என்று
குறிக்கப்பட்டுள்ளது. இதனைத் தெற்கில்
சொக்கச்சீயம், திருநிலையேழுகோபுரத் திருவாசல்
திருப்பணிக்கு உடலாகத் தொண்டை நாட்டு ஆத்தூரில்
நிலம்விட்டதாக வரும் ஆத்தூர் முத்தீசுர முடையார்
கல்வெட்டும், கச்சிஏகம்பமுடையார் கல்வெட்டும்
தெரிவிக்கின்றன1.
மேலைக் கோபுரத்தைத்
திருப்பணிசெய்த சிற்பிகள் விருத்த கிரிசேவகப்
பெருமாளும் அவன் மகன் விச்வமித்துருவும், திருப்பிரைக்குடையாசாரி
திருமருங்கனும், அவன் சகோதரன் சாரணாசாரியும்
ஆவார்கள் எனக் கல்வெட்டுக் காட்டுகிறது2. இன்னும்
அதிலேயே கீழ்ப்புறச் சுவரில் காமதேவன், அகத்தியன்,
சீதேவி, தேவேந்திரன், கணேசன்,
துர்க்கை இவ்வுருவங்களும், வடபுறச்சுவரில் ருத்ரதேவர்,
ராகு கேதுக்கள், நாரதன், அளகேசன், சந்திரன்,
கிரியாசக்தி, சனி, வாயு
____________
1S.I.I. Vol
VIII 51. 2S.I.I 17 - 1916.
|