பக்கம் எண் :

184தலங்களின் வரலாற்றுக் குறிப்புக்கள்(முதல் திருமுறை)


கண்டார். ஆனாலும், அது இரத்தின சபாபதியாகிய மரகத நடராஜரைக் குறிப்ப து என்பது தெளிவு.

அம்மை சிவகாமசுந்தரி என்றும், திருக்காமக்கோட்டமுடைய பெரிய நாச்சியார் என்றும் வழங்கப்படுகிறார். சிவகாமசுந்தரி என்பது சிற்சபையில் இறைவன் இடப்பாகத்தில் எழுந்தருளியிருக்கும் அம்மையைக் குறிப்பதாகும். முக்குறுணி விநாயகர் முகக்கட்டணத்து விநாயகர் எனவும், 1குலோத்துங்கசோழ விநாயகர் எனவும் கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகின்றார். முகக்கட்டணம் என்பது முகப்பு. தில்லைக்குத் தெற்குக்கோபுரமே சிறந்த பெருவாயில். அவ்வழியாகவே நடராஜப்பெருமானை வழிபடச் செல்கின்றவர்கள் செல்வது முறையாம். நடராஜப்பெருமானின் திருமுன்பும் இதுவே ஆதலால் முகப்பிலிருக்கும். பிள்ளையார் முகக்கட்டண விநாயகர் எனக் குறிப்பிடப்படுகிறார். முகக்கட்டணமென்பது முக்கணமாகி - முக்கணம் முக்குணியாக, போலி இலக்கண அறிவு அதனை முக்குறுணியாக்கி விட்டது. அதன்மேல் உருவத்தின் பெருமையையொட்டி, முக்குறுணி அரிசிக்கு ஒரே மோதகம் செய்து நிவேதிக்கப்படுவதால் இப்பெயர் உண்டாயிற்றென்ற செவிவழிச் செய்தியும் கிளைத்து விட்டது.

விக்கிரமசோழன் தெற்குத் திருவீதியில் வடபக்கத்துச் செங்கனி வாயான் திருநந்தவனத்து எழுந்தருளியிருக்கும் திருஞான சம்பந்தப் பிள்ளையார் பண்டார உடலிட்டும் என்ற குறிப்பு காணப்பெறுவதால் விக்கிரமசோழன் திருவீதியில் திருஞான சம்பந்தருக்குத் தனியாகக் கோயில் இருந்தமை தெற்றெனப் புலப்படும். மேலைக் கோபுரத்தை யடுத்து, திருநாவுக்கரசருக்குத் தனிமடம் இருந்ததாகக் காட்டப்பெறுகிறது. முருகன், ‘சுப்பிரமணியப்பிள்ளையார்’ என்று ஒரு கல்வெட்டில் குறிக்கப் பெறுகிறார்.

கற்பகவிநாயகர், ‘க்ஷேத்திரபாலப் பிள்ளையர்’ என்றும், ‘குலோத்துங்கசோழவிநாயகர்’ என்றும் குறிப்பிடப்படுகின்றார். தில்லைக்காளி, ‘தில்லைவனமுடைய பரமேசுவரி’ என்று குறிப்பிடப்படுகின்றார்.

விழாக்கள்:

தில்லையில் திருவானித் திருநாளும், மார்கழித் திருவாதிரைத் திருநாளும் சிறப்பாகக் கோப்பெருஞ்சிங்கன் காலத்து முன்பிருந்தே

_________

1 S.I.I. 365 of 13.