மூர்த்தி:
இறைவன்பெயர்
தாயுமானவர் திருமலைக்கொழுந்தர்,
செவ்வந்திநாதர் எனவும், அம்மையின்பெயர்
மட்டுவார்குழலம்மை எனவும் வழங்கும்.
வடமொழிவாணர் மாதுருபூதேசுவரர்,
சுகந்தகுந்தளாம்பிகையெனக் கூறுவர்.
கல்வெட்டுக்களில் இறைவன் திருமலைப் பெருமான்
அடிகள் என்ற பெயரால் குறிக்கப்பெறுகின்றனர்.
உச்சிப் பிள்ளையார், மாணிக்கவிநாயகர்
ஆலயங்களும், மௌனமடம் முருகன் கோயிலும்
மிகச்சிறப்புடையன.
தீர்த்தங்கள்:
காவிரி,
சிவகங்கை, நன்றுடையான், தீயதில்லான், பிரமதீர்த்தம்
முதலியன உள்ளன. அவற்றுள் ‘நன்றுடையான்’ ‘தீயதில்லான்’
என்ற தீர்த்தங்கள் ஞானசம்பந்தர் தெய்வவாக்கிலும்
திகழ்வன. இவையன்றித் தெப்பக்குளம் ஒன்றுண்டு. அது 16
ஆம் நூற்றாண்டில் அரசாண்ட விசுவநாத நாயகர் வெட்டுவித்தது.
இது மேருவின்
சிகரங்களில் ஒன்று. ஆதிசேடனுக்கும்,
வாயுதேவனுக்கும் நடந்த சொற்போட்டியால்
பிரிந்த சிகரங்களில், ஒன்று திருக்காளத்தி,
மற்றொன்று திரிகோணமலை, மற்றொன்று
திரிசிராமலை என்று புராணம் கூறும்.
கருவுயிர்க்க வருந்திய இரத்தினாவதியின்
நிறைந்த அன்பிற்கிரங்கிப் பெருமானே தாயாக
எழுந்தருளிப் பணிபல புரிந்து பாதுகாத்தார்.
ஆதலால் தாயுமானார் ஆயினார்.
செவ்வந்திப்பூவைத்
திருடிய சிவத்திரவியாபகாரியான பூவாணிகனைக்
கண்டிக்காத பராந்தகனது அரச அநீதியைக் கண்டு,
சாரமாமுனிவர் வேண்டுகோட்படி பெருமான் மேற்குப்
பக்கமாக உறையூரைப் பார்க்கத் திரும்பினார்.
மண் மாரியால் நகர் அழிந்தது. மன்னன்
அழிந்தான் மன்னன் மனைவி கருவுற்றிருந்தாள்.
காவிரியில் வீழ்ந்தாள். அந்தணன் ஒருவன்
பாதுகாத்தான். கரிகாலன் பிறந்தான்.
கருவுற்ற ஆதித்தசோழன் மனைவியாகிய
காந்திமதிக்கு இறைவன் தானே தோன்றிக் காட்சி
கொடுத்து, தான்றோன்றீசர் என்ற திருநாமம்
பெற்ற வரலாறுகளும் புராணங்களில் பேசப்படுகின்றன.
கல்வெட்டு:
இங்குக் குகைகள்
உள்ளன. இவை மகேந்திரன் காலத்தனவே என்பது
குறிப்பிடப்பட்டது. ஒன்று மலைமேலுள்ளது.
மற்றொன்று அடி
|