பக்கம் எண் :

 தலங்களின் வரலாற்றுக் குறிப்புக்கள்191


வாரத்திலுள்ளது. மலைமேலுள்ள கோயில்களிலேயே கல்வெட்டுக்கள் மிகுதியாக உள்ளன. வடமொழியிலமைந்த எட்டு சுலோகங்கள் மகேந்திரவர்மனது மதமாற்றத்தையும் அதனால் அவன் செய்த சிவப்பணிகளையும் தெரிவிக்கின்றன. அவற்றில் கல்தச்சராலே இந்த அரசனுடைய புகழ் விரிந்து நீடித்திருக்க வேண்டும் என்ற செய்தியைத் தெரிவிக்கிறது ஒரு சுலோகம். இத்தலத்தைப் பற்றிய கல்வெட்டுக்களும் செப்புப் பட்டயங்களும் நிரம்ப உள்ளன. அவற்றுள் காலத்தால் முற்பட்டது கி.மு. 2 ஆம் நூற்றாண்டில் எழுந்த பிராமி எழுத்தால் எழுதப்பட்ட கல்வெட்டாகும்1.

தொடர்ச்சியாகப் பல கல்வெட்டுகள் காணப்படுகின்றன. அவை பல்லவ கிரந்தத்தாலும், தமிழாலும் ஆக்கப்பெற்றன.

இராஜகேசரிவர்மன்:

இவன் ஆட்சி பதினாறாம் ஆண்டில் சாகுபடிக்குக் கொண்டு வரப்படாத நிலங்களைக் குறைந்தவிலையாக ஐந்து கழஞ்சுக்கு விற்று, நிலம் விளைச்சலுக்கு வந்த பிறகு, நிலம் வாங்கியவர்கள் திருவிழாக் காலங்களில் சித்திரைத் திருநாளில் ஒன்பது நாட்களுக்குப் பன்மா கேசுவரர்களுக்கும் உணவு இடும்படி உத்தரவிட்டான்.2

பாண்டியன் மாறன் சடையன்:

இவன் ஆட்சி 4-ஆம் ஆண்டில் நிலமளித்திருக்கிறான். இதில் இறைவன் திருமலைப் பெருமான் என்றழைக்கப்படுகிறான்.3 வேங்கட தேவமகாராயர் சகம் 1351 வீரப்ப நாயக்கருடைய மேன்மைக்காக நிலமளித்தார். மதுரை விஜயரங்க சொக்கநாத நாயக்கருடைய காலத்தில் நரசபந்துலு என்னும் தன்வந்திரி வைத்தியருக்கு இறையிலியாக நிலமளிக்கப்பட்டது.4

அவ்வாறே திருமலை அப்பராயத் தொண்டைமான் மகனும், திருமலைராயத் தொண்டைமான் பேரனுமான இராஜா விஜயரகுநாதத் தொண்டைமான் சகம் 1772-இல் கி.பி. 1805-இல் ஒராண்டிக்கோடி கிராமத்தைத் தேனாம்பட்டணம் இருளப்ப முதலியாரிடம் அளித்து,

_________

1 139 of 1938, 2 985 of 1013, 3 413, 414 of 1904. 4 E.P.R. 1911 page 90.