திருச்சிராப்பள்ளியில்
அறச்சாலைநடத்த ஏற்பாடு செய்தான் நல்லப்ப
காலாட்க தோழராலும், ரங்கப்ப காலாட்க
தோழராலும் அளிக்கப்பட்ட தேவதானங்களை
அறிவிக்கும் செப்புப்பட்டயங்கள் உள.
கல்வெட்டுக்களில் சிறப்பாகக் குகைக்கோயில்
பின்சுவரில் திரிசிராமலை அந்தாதியொன்று
எழுதப் பெற்றுள்ளது. அது 103 பாடல்களை உடையது.
அதில் 104 ஆம் பாடலாக "மாட மதுரை மணலூர் மதில்
வேம்பை, யோடமர் சேய்ஞலூர் குண்டூரின் - நீடிய,
நற்பதிக்கோன் நாரா யணன்சி ராமலைமேல்,
கற்பதித்தான் சொன்ன கவி" என்றதால்
நாராயணன் என்பவன் கல்வெட்டுவித்தான் என்று
குறிப்பிடப்படுகிறது.
65. திருப்பாற்றுறை
சோழ வளநாட்டுக்
காவிரி வடகரைத்தலம்.
திருச்சிராப்பள்ளியிலிருந்து கல்லணை செல்லும்
பேருந்தில் ஏறி, பனையபுரம் என்ற ஊரில்
இறங்கி, வடக்குநோக்கி வரவேண்டும்.
இத்தலத்துப்போந்த மார்க்கண்டேயமுனிவர்
சிவபூசைக்குப் பால் இல்லாமையால் வருந்திய போது,
சிவபெருமான் அருளினால் பால் பெருகியது ஆதலால்
இப்பெயர் எய்தியது. கொள்ளிட நதியின்
தென்கரையில் உள்ளது.
இறைவன்பெயர்
திருமூலநாதர், மூலநாதேசுவரர்; இறைவியின்
பெயர் மோகநாயகி, மேகலாம்பிகை;
தீர்த்தம் - திருக்குளம்.
இடம்
திருவானைக்காவிலிருந்து கிழக்கே 8 கி.மீ.
தூரத்தில் உள்ளது.
கல்வெட்டு:
இத்தலத்தைப்பற்றி
அரசியலாரால் படியெடுக்கப்பட்ட கல்வெட்டுக்கள்
பதினாறு உள்ளன. அவை முதற்பராந்தகன் பரகேசரி
வர்மனான விக்கிரமசோழன், இராஜராஜன்,
இராஜேந்திர சோழதேவன் காலத்தன. அவற்றால்
இத்தலம் கொள்ளிடத்துத் தென்கரைநாட்டுப்
பிரமதேயமான உத்தமசீலி சதுர்வேதி மங்கலத்துத்
திருப்பால்துறை என விக்கிரமசோழன் காலத்துக்
குறிப்பிடப்படுகிறது. 1இறைவன் திருப்பால்துறை
மகாதேவர்2 என்றும் திருப்பால்துறை
_________
1 575 of 1908. 2 575 of
1908.
|