பக்கம் எண் :

 தலங்களின் வரலாற்றுக் குறிப்புக்கள்193


நாயனார் என்றும்1 திருப்பால்துறை உடையார்2 என்றும் வழங்கப்படுகிறார். கல்வெட்டுக் குறிப்பாளர் ஆதிமூலேசுவரர் என்று அழைக்கிறார். தலம் திருப்பாலைத்துறை என இக்காலத்து வழங்குகிறது. கோயிலுக்கண்மையில் திருநாவுக்கரசர் திருமடமும்3 ஆண்டார் எம்பிரானார் மடம் எனப்பெரிய லிங்கிய சந்தானத்து மடமும்4 திருவானைக்கா திருஞானசம்பந்தர் மடமும்5 நாற்பத்தெண்ணாயிரவர் திருமடமும்6 இருந்தனவாகக் குறிக்கப்பட்டுள்ளன. அவற்றிற்கு அரசர்கள் நிலம் வழங்கிய செய்தியும் குறிக்கப்படுகின்றன.

ஏனைய கல்வெட்டுக்கள் திருக்கோயிலுக்கு விளக்கிற்காக நிலமும் பசுவும் ஆடும்விட்ட செய்தியை அறிவிப்பன. இவையன்றி, கோயிலுக்கு வடபக்கத்தில் காக்கும் நாயகன்மடம் என்ற ஒன்று இருந்ததாகவும் அதற்கு மும்முடிச் சோழமங்கலத்துச் சபையார் நிலமளித்தாகவும் தெரிகிறது.7 திருப்பனம்பூதூர் பரமேசுவரருக்கு அரிகுலகேசரிதேவரால் உத்தமசீலி சதுர்வேதி மங்கலத்து நிலம்விட்ட செய்தியும் அறியப்படுகிறது.

66. திருவேற்காடு

தொண்டை நாட்டுத்தலம். சென்னையைச் சேர்ந்த தலம். சென்னையிலிருந்து நகரப் பேருந்துகள் பல உள்ளன. இங்கு வேல் தலவிருட்சமாதலின் இப்பெயர் எய்தியது. இங்குள்ள இறைவன் அகத்தியருக்கு மணக்கோலங்காட்டியருளினார். சுப்பிரமணியர், சூரசம்காரத்தின் பின் பூசித்த தலம்.

இறைவன்பெயர் - வேற்காட்டுநாதர், வேதபுரீசுவரர்; இறைவியின்பெயர் - வேற்கண்ணியம்மை; தீர்த்தம் - வேலாயுததீர்த்தம்; விருட்சம் - வேல். கருமாரியம்மன் கோயில் பிரசித்தமானது.

67. திருக்கரவீரம்

சோழநாட்டுக் காவிரித் தென்கரைத்தலம். இத்தலம் கரையபுரம் என வழங்கும். திருவாரூர், கும்பகோணம் பேருந்து வழியில் உள்ளது. கௌதமர் பூசித்துப் பேறுபெற்ற தலம். கரவீரம் - பொன் அலரி. அலரியைத் தலமரமாகக் கொண்ட காரணத்தால் கரவீரம்

________

1,2 582, 3 583, 4 584, 5 585, 6 586, 7 582