என்றாயது.
இறைவன் கரவீரநாதர்.
இறைவி பிரத்தியட்சமின்னம்மை. தீர்த்தம்
அனவரத தீர்த்தம்.
இத்தலம்
திருவாரூருக்கு மேற்கே உள்ளது.
68. திருத்தூங்கானைமாடம்
(பெண்ணாகடம்)
நடுநாட்டுத் தலம்.
விருத்தாசலத்திலிருந்து பேருந்துகளில் செல்லலாம்.
இத்தலம் பெண்ணாகடம் எனவும் திருக்கடந்தைநகர்
எனவும் வழங்கும். பெண் (தேவகன்னியர்) ஆ
(காமதேனு) கடம் (வெள்ளையானை) ஆகிய இவர்கள்
பூசித்துப் பேறுபெற்றதாதலின் இப்பெயர் எய்தியது.
ஆலயத்தின் பெயர் தூங்கானைமாடம்.
அப்பரடிகள் "பொன்னார்திருவடிக் கொன்றுண்டு
விண்ணப்பம்" என்றேத்தித் தம்முடைய
தோளின்மேல் சூலக்குறியும் இடபக்குறியும்
பெற்றதலம். இங்கவதரித்த
கலிக்கம்பநாயனார், ஒருநாள் தன்பணியாளனே
சிவனடியாராக வர, தம்மனைவி அவருக்கு
நீர்வார்க்கத் தாழ்த்தமையை யறிந்து
மனைவியின் கரத்தை வாள்கொண்டு வெட்டி
வீடுபெற்றார். மெய்கண்டதேவரின் தகப்பனார்
அச்சுத களப்பாளர் வாழ்ந்த தலமும் இதுவே.
சுவாமிபெயர்
சுடர்க்கொழுந்துநாதர். அம்மை கடந்தை நாயகி.
தீர்த்தம் கெடிலநதி.
கல்வெட்டு:
பரகேசரிவர்மனான
இராஜேந்திரன் காலத்தில் வடகரை இராஜாதிராஜ
வளநாட்டு மேற்காநாட்டுப் பிரமதேயமான முடிகொண்ட
சோழ சதுர்வேதி மங்கலத்துத்
திருத்தூங்கானைமாடம் என்று குறிக்கப்பட்டுள்ளது.
இறைவன் நாமம் திருத்தூங்கானை மாடமுடைய மகாதேவர்
எனவும்1 திருத்தூங்கானைமாடமுடைய நாயனார்2 எனவும்
நல்ல பெண்ணாகடத்திலுள்ள வீற்றிருந்த
_______________
1 235 of 1929, 2 247 of
1929.
|