பெருமாள்1 எனவும்
திருத்தூங்கானை மாடத்துக்கடவுள்2 எனவும்
வழங்கப்படுகின்றனர். இவையன்றி கோயிலுள்
கோச்செங்கணேசு வரமுடையார் கோயிலும்3 மதுராந்தக
ஈச்சரமுடையார் கோயிலும்4 தனிமையாகப்
பள்ளிகொண்ட பெருமாள் கோயிலும்5
இருந்திருக்கின்றன.
இராஜகேசரிவர்மனான
குலோத்துங்கன் காலத்து வடகயிலாயமுடைய
மகாதேவர்க்கு விருதராச பயங்கர வளநாட்டு மேற்கா
நாட்டு முடிகொண்ட சோழ சதுர்வேதி மங்கலத்துச்
சபையாரால் நிலம் தானம் வழங்கப்பட்டது.
திருத்தூங்கானை மாடமுடைய மகாதேவர் கோயிலுக்கும்
கோச்செங்கணே சுவரமுடையார் கோயிலுக்கும்
முடிகொண்டசோழ சதுர்வேதி மங்கலத்துத்
தேவதானமான கிராமத்தைச் சேரிசபையார்
இறையிலிசெய்தனர். குலோத்துங்கன்
தான்பிறந்த நாளாகிய மாதபூச விழாவை நடத்தவும்,
கோயில் நாட்பூசைக்காகவும் நிலமளிக்க
உத்தரவிட்டான். மேலும்
மதுராந்தகேசுவரமுடையார் கோயிலிலுள்ள இரு
சிவப்பிராமணர்களுக்கு உணவளிக்கப் பணம்
வழங்கப்பட்டது. பரகேசரிவர்மனான
இராஜேந்திரன் காலத்து,
திருத்தூங்கானைமாடமுடைய மகாதேவர் கோயிலுக்குத்
தூண்டா விளக்கெரிக்கப் பசுக்கள் வழங்கப்பட்டன.
தென்கரை நித்தவினோத வளநாட்டுக்
கிழார்க்கூற்றத்துக் கீழநல்லூர் உடைய ஒருவன்
பசுக்கள் அளித்த செய்தி குறிக்கப்பட்டடுள்ளது.
கடவுளுக்கு நீராட்டவும் பார்ப்பனர்களுக்கு
அன்னமளிக்கவும் ஸ்ரீராமன் ஸ்ரீதரரான பவித்திர
மாணிக்கச்சேரி உடையான் ஒருவனால்
ஏற்பாடுசெய்யப்பட்டது. இராஜகேசரிவர்மனான
ராஜராஜன் முத்திரையிடப்பட்ட அளவைகளால்
வியாபாரிகள், பொருள்களை அளக்கவும் சில
வரிகளைக் கோயிலுக்களிக்கவும்
ஏற்பாடுசெய்தான்6 249-ஆவது கல்வெட்டால்
மூவாயிரவன் கோல் என்ற நீட்டலளவை (15அடி) யால்
நிலமளந்த செய்தி தெரிகிறது.
பரகேசரிவர்மனான விக்கிரமன் காலத்து அரையன்
ஆதித்ததேவன் தேவர்கள்நாதன் என்ற மரக்காலைப்
பயன்படுத்தியுள்ளான்7 குலசேகரன் காலத்துப்
பொன்பேத்தி அம்பலத்தாடி அழகனால் மண்டபமும்,
முகப்பும் கட்டப்பட்டன. அரசன் மந்திரியான
மையிருஞ் சோலை. மண்டபங் கட்டியுள்ளான்.
விஜயநகர
தேவமகாராயர் காலத்தில் நைவேத்தியத்திற்கும்
திருப்பணிக்கும் பள்ளிகொண்ட பெருமாள்
கச்சிராயருடைய மகனான
_________
1 250 of 1929, 2 255 of
1929, 3 238, 4 239, 5 273, 6 244 of 1929, 7
270 of 1929.
|