பக்கம் எண் :

68முதல் திருமுறையின் உரைத்திறம்(முதல் திருமுறை)


75-4. கொடுகொட்டி - ஒரு வகை வாத்தியம். இப்போது கிடுகிட்டி என வழங்குகிறது.

75-5. தக்கைகொள்பொக்கணம் இட்டு - தக்கை என்னும் வாத்தியத்தை வைத்து மறைத்த துணிமூட்டையைப் புறத்தோளில் தொங்கவிட்டு.

75-9. விண்ணவர் கைதொழுது ஏத்த எமை வேறாள விரும்பிய விகிர்தர் - தேவர்கள் தம் போகத்திற்கு இடையீடு வாராமை குறித்து வணங்குவர். ஆதலால் அவர்களுக்கு எளிதில் அருள் வழங்காது எம்மைச் சிறப்பாக வைத்து ஆள்கின்றார்.

75-11. நண்ணிய நூலன் - தான் வருந்திப்பயிலாமல் தாமாகவே அடைந்த வேதத்தை உடைய ஞானசம்பந்தன்.

76-4. தேனுமாய் அமுதமாய்த் தெய்வமும் தானாய் - தேன் இதயத்துக்கு வலி ஊட்டி உடல் வளர்க்கும் இனித்த மருந்தாவது. அமுதம் அழியாமை நல்கும் மருந்து. இவை இரண்டும் எடுத்த பிறவிகளுக்கு மட்டுமே இன்பம் அளிப்பன. தெய்வம் எடுத்த எடுக்கப் போகின்ற பிறவிகட்கும் பிறவியற்ற பேரின்பநிலைக்கும் இன்பம் அளிப்பது ஆதலால் தேனுமாய் அமுதமுமாய் என்றருளிய பிள்ளையார் அடுத்துத் தெய்வமும் தானாய் என்கின்றார்.

77-2. தேனினும் இனியர் பால் அன்ன நீற்றர் தீங்கரும்பு அனையர் தம் திருவடி தொழுவார் ஊன் நயந்து உருக உவகைகள் தருவார் - எம்பெருமான் எக்காலத்தும் அள்ளூறிநின்று இனிக்கும் பொருளாக இருத்தலின் நாப்புலனோடு ஒன்றிய கணத்து இனித்துப் பின் புளிப்பதாய தேனினும் இனியர். பால் உண்டார்க்குப் பித்தநோய் தணிக்கும். நீறுகண்டாருக்கும், பூசினாருக்கும் மலமயக்கம் போக்கலின் இங்ஙனம் கூறினார். கரும்பு பருவத்திற்கும் முயற்சிக்கும் ஏற்ப நுகரும் முறையில் இனிப்பைக் கொடுக்கும். எம்பெருமானும் ஆன்மாக்களின் பக்குவ நிலைக்கு ஏற்ப இனிப்பவன். சடமாகிய மாயா காரியமாகிய உடல் உயிர்பெறும் இவ்வின்பத்தைப் பெற்றிலமே என்று விரும்பி உருக ஆன்மாவிற்குப் பெருமான் மகிழ்ச்சியை விளைவிப்பான்.

77-4. தமிழ்ச்சொலும் வடசொலும் தாள் நிழல் சேர - ஒலி வடிவாயசொற்கள் யாவும் இறைவனிடமிருந்தே தோன்றியன