7. விளக்கவுரை:
82-3. மயிலும் மடமானும்
மதியும் இளவேயும் வெயிலும் பொலிமாதர்.
இந்நகரத்து மாதர்
இனிமை தரும் மென்மையாகிய
சாயலால் ஆண் மயிலையும், மருண்ட நோக்கத்தால்
மானையும், நுதல் அழகால் பிறைமதியையும், தோள்களால்
மூங்கிலையும், கற்பினால் வெயிலையும் போல
விளங்குகின்றனர்.
129-7. புவிமுதல் ஐம்பூதமாய்ப் புலன்
ஐந்தாய் நிலன் ஐந்தாய்க் கரணம் நான்காய் அவை
அவை சேர் பயன் உருவாய், அல்ல உருவாய்.
நிலன் ஐந்து - சுவை, ஒளி, ஊறு,
ஓசை, நாற்றம் என்பன.
கரணம் நான்கு - மனம்
புத்தி சித்தம் அகங்காரம் என்பன.
அவை சேர்பயன் உருவாய் - பூதம் முதலியவற்றைச்
சேர்ந்த பயனே வடிவாய்; என்றது பூதப்பயனாகிய
சுவை முதலிய தன்மாத்திரை ஐந்தும், புலன் ஐந்தின்
பயனாய பொறி இன்பம் ஐந்தும், கரணம் நான்கின்
பயனாய நினைத்தலும் புத்தி பண்ணலும் சிந்தித்தலும்
இது செய்வேன் என அகங்கரித்து எழுதலும் ஆகிய நான்கும்
கொள்ளப்படும். அல்ல உருவாய் - இவை அல்லாத
அருவாகிய ஞானமாய்.
136-1. மாதர்மடப் பிடியும் மட அன்னமும்
அன்னதோர் நடை.
உமாதேவியின் பெருமித
நடைக்குப் பெண்யானை நடையும் நடையின் மென்மைக்கு
அன்ன நடையின் மென்மையும்
உவமை ஆயின.
இத்தகைய விளக்கவுரைகள் பல
இம்முதல் திருமுறை உரையில் காணலாம்.
|