பக்கம் எண் :

117

கல்வெட்டு:

     இக்கோயிலில் பிற்காலத்துச் சோழ மன்னர்கள், பாண்டியர்கள்,
ஹொய்சலர்கள், விஜயநகர அரசர்கள், மதுரை நாயக்கர்கள் இவர்கள்
காலங்களில் பொறிக்கப்பெற்ற நூற்று ஐம்பத்து நான்கு கல்வெட்டுக்கள்1
இருக்கின்றன. இவைகளெல்லாம் சரித்திர சம்பந்தமான உயரிய செய்திகளைத்
தெரிவிக்கின்றன.

     இக்கோயில் சிவபெருமான் திருவானைக்கா உடையார், திருவானைக்கா
உடைய நாயனார், மகாதேவபட்டர் என்னும் திருப்பெயர்களாலும், அம்பிகை
அகிலாண்டநாயகி என்னும் பெயராலும் குறிக்கப்பெற்றுள்ளனர். இக்கோயில்
முதற் பிராகாரத்துத் துவார பாலகர் இருவரையும் எழுந்தருளுவித்தவர்
இருங்கொளப்பாடி வளநாட்டுக் கருப்பூரில் இருந்த இளைய நயினார் மகனார்
தெய்வங்கள் பெருமாள் ஆவர். இச்செய்தி அத்துவார பாலகர்களின்
அடிப்பீடங்களில் பொறிக்கப்பட்டிருக்கின்றது.

     நான்காம் பிராகாரத்தில் அகிலாண்டநாயகி அம்மன் கோயிலின்
முன் உள்ள பசுபதீஸ்வரம் உடையாரை எழுந்தருளுவித்தவர் நீலகண்ட
நாயக்கராவர். இச்செய்தி ஹெய்சால வம்சத்தைச் சேர்ந்த வீர
ராமநாததேவரின் பதினான்காவதாண்டுக் கல்வெட்டால் தெரியவருகின்றது.
இக்கோயிலின் உற்சவ மண்டபத்தைக் கட்டியவர் சதாசிவ வரஜப்பைய யாஜி
தீட்சிதராயர் ஆவர். இவரே அமாவாசை, பொங்கல் புதுநாள் இவைகளின்
சிறப்புப் பூசனைக்கு நிவந்தமும் அளித்துள்ளார். முதற் பிராகாரத்தின்
வடகிழக்கு மூலையிலுள்ள எடுத்தருளிய ஸ்ரீபாதீஸ்வரம் உடைய நாயனார்
கோயிலைக் கட்டியவர், திருஞானசம்பந்தர் என்னும் பெயரினர் ஆவர்.,
நான்காவது பிராகாரத்திலுள்ள மேலக்கோபுரம் ஆதித்யதேவனது மகனான
சந்தபேந்திரனால் சகம் 1357 அதாவது கி.பி. 1435-இல் கட்டப்பெற்றதாகும்.
வலம்புரி விநாயகரையும், சுப்பிரமணியரையும் மும்முடி திம்மரசர் என்பார்
எழுந்தருளுவித்துள்ளார். விபூதி


     1See the Annual Reports on South Indian Epigraphy for the year 1891, No. 18-32; year 1903, No. 61-67; year 1905, No. 499-508;
year 1908. No. 480-487; year 1910, No. 92, year 1937, No. 103-136;
year 1938, No.1-79.

     Also see the South Indian Insvriptions, Volume IV, No.
419-430; Volume III, No. 76.