|
மகாதேவ
தீட்சிதர் மகன் சதாசிவ மகின் (தீட்சிதர்) காவை
நூல்கள் எனப் பல எழுதினார்1. திருவானைக்காவிலுள்ள நஞ்சை
நிலங்களை அளந்தகோல் சிவநாமத்திரேயம் என்னும் பெயர் பூண்டதாய்
நான்கு அடி நீளமுள்ளதாய் இருந்தது. அகிலாண்ட ஈஸ்வரிகோயில்,
ஜம்புநாதர் கோயில் இவைகளின் தளவரிசைகளைச் செய்தவர்
பாஸ்கரராயபாரதி தீட்சிதர் ஆவர். தோப்பு ஒன்றிற்குச் சிலந்தியைச்
சோழனாக்கினான் என்னும் பெயரும் பட்டன் ஒருவனுக்கு என்னானைக்
கன்று என்ற பெயரும் வைக்கப் பெற்றிருந்தன. என்னானைக் கன்று
என்னும் பெயர் இவ்வூர்த் திருத்தாண்டகத்திலும் கூறப் பெற்றுள்ளது.
விஜயரங்க சொக்கநாத
நாயகருடைய நாடகசாலை ஆசிரியர்
வைத்தியப்ப ஐயா, ஜம்புதீர்த்த மண்டபத்திற்குப் படித்துறைகள்
கட்டியுள்ளார்.
சங்கரமகா
தேவர்க்கு இவ்வூரில் மடம் இருந்தது.
நாற்பத்தெண்ணாயிரவர் என்னும் பெயருள்ள மற்றொரு மடமும்
இருந்தது. அதில் துறவிகட்கு அன்னம் அளிக்கப்பட்டுவந்தது.1
14.
திருஇடைமருதூர்
மருதமரத்தைத்
தலவிருட்சமாகக் கொண்ட பாடல்பெற்ற பதிகள்
மூன்றாகும், அவை வடநாட்டிலுள்ள மல்லிகார்ச்சுனம் என்ற சீபர்ப்பதம்,
பாண்டிநாட்டில் உள்ள திருப்புடைமருதூர், சோழ நாட்டிலுள்ள
திருவிடைமருதூர்; ஆகும்.
இவற்றுள்
சீபர்ப்பதத்துக்கும் திருப்புடைமருதூர்க்கும் இடையில்
மருத மரத்தைத் தலவிருட்சமாகக் கொண்டிருப்பதால் இது திருஇடைமருதூர்
என்னும் பெயர்பெற்றது.
மயிலாடுதுறை கும்பகோணம்
தொடர்வண்டிப் பாதையில்,
திருவிடைமருதூர் தொடர்வண்டி நிலையத்திற்கு அருகில் இருக்கின்றது.
மயிலாடுதுறை - கும்பகோணம் நெடுஞ்சாலையில் ஆடுதுறையை
அடுத்துள்ளது இவ்வூர். பேருந்து வசதி மிகுதியும் உண்டு. இது காவிரிக்குத்
தென்கரையிலுள்ள 30 ஆவது தலமாகும்.
1திருவானைக்கா,
திருவாவடுதுறை ஆதீன வெளியீடு.
|