பக்கம் எண் :

120

     இறைவரின் திருப்பெயர்: மருதவாணர், மகாலிங்கேசுவரர்
இப்பதியைச் சுற்றி இருக்கும் சிவதலங்களின் அமைப்பை ஒட்டி நடேசர்
சந்நிதி - தில்லையாகவும், தட்சிணாமூர்த்தி சந்நிதி - ஆலங் குடியாகவும்,
நவக்கிரகக் கோயில் - சூரியனார் கோயிலாகவும் விநாயகர் சந்நிதி -
திருவலஞ்சுழியாகவும், முருகர் சந்நிதி - சுவாமி மலை ஆகவும், வைரவர்
சந்நிதி - சீகாழியாகவும், சண்டேசுவரர் சந்நிதி - திருச் சேய்ஞலூராகவும்
விளங்குகின்றன. ஆதலால், இது மகாலிங்கத்தலம் என்றும் இறைவர்க்கு
மகாலிங்கேசுவரர் என்றும் திருப்பெயர்கள் ஏற்பட்டன. இறைவியாரின்
திருப்பெயர்: நன்முலைநாயகி.

     தீர்த்தம்: காவிரி அயிராவணத்துறை பூசநாளில் இத்துறையில்
இறைவர் தீர்த்தம் கொடுத்தருளுவர். இப்பூசநாளில் நீராடலைப்பற்றி அப்பர்
பெருந்தகையார், இத்தலத்துத் திருக்குறுந்தொகையில்,

“ஈச னெம்பெரு மான்இடை மருதினில்
பூச நாம்புகு தும்புன லாடவே”

எனவும், திருஞானசம்பந்தப் பெருந்தகையார்.    

“பூசம் புகுந்தாடிப் பொலிந்தழகாய
ஈச னுறைகின்ற விடைமருதீதோ”

எனவும் சிறப்பித்து அருளினர்.

     உமாதேவியார், உருத்திரர், மூத்தபிள்ளையார், முருகர், பிரமன்,
விஷ்ணு முதலியோர் பூசித்துப் பேறுபெற்றனர். பெரிய அன்பினையுடைய
வரகுணபாண்டியதேவரின் கொலைப்பழியைப் போக்கியருளிய தலம்
இதுவாகும். பத்திரகிரியார், பட்டினத்துப் பிள்ளையார் இவர்கள் இப்பதியில்
பலநாட்கள் தங்கித் தவம்புரிந்து அருள் பெற்றனர். இவர்களுள்
பட்டினத்தடிகளார் பிரதிமை கீழைக் கோபுர வாசலிலும், பத்திரகிரியார்
பிரதிமை மேலைக்கோபுர வாசலிலும் இருக்கின்றன. வரகுணதேவரைப்
பிடித்து நீங்கிய பிரமகத்தியின் உருவம் கீழைக்கோபுர வாசலில் உள்ளது.

     “பாரனைத்தும் பொய்யெனவே பட்டினத்துப் பிள்ளையைப் போல்
ஆரும் துறக்கை அரிது அரிது” என்ற தாயுமானவரால் பெரிதும்
பாராட்டப்பெற்ற பட்டினத்து அடிகளார் இத்தலத்திற்கு மும்மணிக்
கோவை ஒன்றை இயற்றியுள்ளார். அது பதினொராந் திருமுறையில்
சேர்க்கப்பெற்றுள்ளது. கோடீச்சுரக்கோவையைப் பாடிய