பக்கம் எண் :

219

     இத்தலத்திற்கு ஞானசம்பந்தர் பதிகம் ஒன்று, நாவுக்கரசர் பதிகங்கள்
இரண்டு ஆக மூன்று பதிகங்கள் இருக்கின்றன. இது தொண்டை நாட்டுத்
தலங்களுள் ஒன்றாகும்.

கல்வெட்டு:

     இங்குள்ள கோயிலில் பதினாறு கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன.
தொண்டைமண்டலம், ஈக்காடு கோட்டம், காக்கலூர் நாட்டுத் திருப்பாசூர்
என்று கண்டிருக்கின்றது.

     இராஜராஜன் நாளில் பூசைக்காகப் பட்டமாருக்கு நாற்பத்தேழுகாசு
தரப்பட்டது. அதேகாலத்தில் விளக்கிற்காக முப்பத்திரண்டு பசுவும்,
முரசிற்காக ஒரு இடபமும் தரப்பட்டன. குலோத்துங்கன் நாளில்
நாற்பத்தெண்ணாயிரனது மகள் ஒரு திருவாபரணத்திற்காக முப்பதுகாசும்,
நாள் ஒன்றிற்கு இரண்டுபடி அரிசியும் தந்தாள். ஒரு காளிங்கராயன் பத்து
விளக்குக்களுக்காக எழுபத்தெட்டுக்காசு கொடுத் துள்ளான். வீரகம்பணன்
நாளில் ஒருவன் ஒரு தோட்டத்தைக் கொடுத் துள்ளான்.

              63. திருப்பாண்டிக்கொடுமுடி

     இது கொடுமுடி புகைவண்டி நிலையத்திற்கு வடக்கே 1 கி. மீ.
தூரத்தில் இருக்கின்றது. இது கொங்குநாட்டுத் தலங்களுள் ஒன்றாகும்.
திருச்சிராப்பள்ளி - கரூர் - கொடுமுடி என்ற பேருந்து வழியில்
பேருந்தின்மூலம் இத்தலத்தை அடையலாம்.

     இறைவர் திருப்பெயர் கொடுமுடிநாதர். இறைவி திருப்பெயர்
பண்மொழிநாயகி.

     தலவிருட்சம் வன்னி.

     தீர்த்தம் காவிரி.

     மூவர்களாலும் பாடப்பெற்ற பெருமை வாய்ந்தது. இத்தலத்திற்கு
மூன்று பதிகங்கள் இருக்கின்றன, இத்தலத்துச் சுந்தர மூர்த்தி நாயனாரது
திருப்பதிகம் நெஞ்சை உருக்கும் தன்மை வாய்ந்தது.

     கோயமுத்தூர் வித்துவான், கந்தசாமி முதலியாராலும்,