பக்கம் எண் :

220

வேங்கடரமண தாசர் என்பவராலும் இயற்றப்பெற்ற தலபுராணம் அச்சில்
வெளிவந்துள்ளது.

கல்வெட்டு:

     இவ்வூர்க்கோயிலில் எட்டுக் கல்வெட்டுக்கள் 1 முன்னமே படி
எடுக்கப்பட்டிருந்தன. அவைகளின் சாரம் பின் வருமாறு:-

     1. திருப்பாண்டிக் கொடுமுடியுடையாருக்கும், பெரிய
திருவடிநாயனாருக்கும் மாசி மகத்து விழா, வழிபாடு கோயில் திருப்பணி
முதலியவற்றிற்காக விதரி என்ற திருச்சிற்றம்பல நல்லூர், எழுநூற்றுவர்
சதுர்வேதி மங்கலம், திருவூஞ்சலூர், வள்ளிபுரம், வடிவுடைய மங்கை
ஐயகரம், திருக்காட்டுத்துறை என்ற ஊர்கள் இறையிலியாகக்
கொடுக்கப்பட்டன. காலம் முதலிய விவரங்கள் தெரியவில்லை.

     அம்மன் கோயில் அர்த்தமண்டபத்தில் உள்ள கல்வெட்டின் படி
கோனேரின்மை கொண்டான் மூன்றாம் ஆண்டில் பாண்டி மண்டலத்து
மயிலூர் உடையான் என்னும் போதமுதியான் என்பவன் பாண்டிக் கொடுமுடி
ஆளுடையார் கோயிலில் இளைய பிள்ளையாரையும், பள்ளிகொண்ட
பெருமாள் கோயிலில் கருடாழ்வாரையும் எழுந்தருளுவித்து அரசன்
நன்மையின்பொருட்டு இருகூறாக ஐந்து பொன் தந்தான்.

     அம்மன் கருவறைச்சுவரில் உள்ளதன்படி விதரி என்ற திருச்சிற்றம்பல
நல்லூரில் இருபதுமா நிலத்தை இறையிலியாக மேல்கரை
அறையூர்நாட்டார்க்கு விட்டநான்குமா போக மற்றவைகள் திருப்பாண்டிக்
கொடிமுடியுடையார்க்கும், விதரி திருச்சிற்றம்பலமுடையாருக்கும்
கொடுக்கப்பட்டன.

     வீர நாராயணன் ரவிவர்மன் இருபத்தேழாம் ஆண்டில் திருக்கொடுமுடி
மகாதேவர்க்கு வழிபாட்டிற்காகவும், மாசி மகத்திற்காகவும் மேல்கரை,
அறையூர்நாட்டு ஊஞ்சலூரை இறையிலியாகக் கொடுத்துள்ளான்.


     1See the Annual Reports on South Indian Epigraphy for the
year ending 1902. No. 115-135.

     See also South Indian Inscriptions, Vol. VII, No. 739-759.