|
காப்பியர் இயற்றிய
கலம்பகமும் இருக்கின்றன. இவைகள் அச்சில்
வெளிவந்துள்ளன.
சிவாய
நமவென்று நீறணிந்தேன்
தருவாய் சிவகதி நீ பாதிரிப் புலியூரனே |
என்னும் அப்பர் பெருமானுடைய
திருவாக்கு, சிவாயநம என்று சொல்லித்
திருநீற்றை அணிந்து கொள்ளவேண்டும் என்பதைத் தெரிவிக்கின்றது.
திருந்தா வமணர்தற் தீநெறிப் பட்டுத் திகைத்து முத்திதரும் தாளிணைக்கே
சரணம் புகுந்தேன் என்னும் அவருடைய திருவாக்கு. அவர் சமண
சமயத்திலிருந்ததற்கு அகச்சான்றாய் உள்ளது.
இவ்வூரில்
திருக்கோவலூர் ஆதீனத்தைச்சேர்ந்த ஒரு மடாலயம்
இருக்கின்றது. அது வீர சைவ மடமாகும்.
கல்வெட்டு:
இந்தக்கோயிலில்
21 கல்வெட்டுக்கள் படியெடுக்கப்பட்டுள்ளன,
கோயில் புதுப்பிக்கப்பட்டபோது அவை அகற்றப்பட்டுச் சிதறிக்கிடக்கின்றன.
கல்வெட்டுக்கள் இரண்டைத் தவிர மற்றவை யெல்லாம்
சோழர்களுடையனவே. இவை பத்தாம் நூற்றாண்டிலிருந்து பதின்மூன்றாம்
நூற்றாண்டுவரையில் வெட்டுவிக்கப்பட்டவையாம். கோப்பரகேசரிவர்மன்
காலத்தில் கி.பி. 969இல் சோமாசியார் 5 பிராமணர்களுக்குக் குடியிருக்க
நிலம் தந்ததும், கி.பி.923இல் தாமோதக்கன் ஒற்றியூரான் ஒரு
கமுகந்தோட்டம் கொடுத்ததும், நாராயணன் சேந்தன் திருவமிர்தத்திற்காக
வேண்டும் முதல் கொடுத்ததும் கண்டிருக்கின்றன. பிறகு இராசகேசரி
காலத்தில் (கி. பி 959) ஒரு நந்தா விளக்கிற்காக 96 ஆடுகள்
கொடுக்கப்பட்டன. வீரராசேந்திரன் காலத்தில் (கி.பி.1057) மும்முடிச்சோழப்
பேரியான் நுந்தாவிளக்கு வைத்ததும், காடன்தேவன் 80 கலம் நெல் தந்ததும்
காண்கின்றன. குலோத்துங்கன் காலத்தில் கி. பி. 1076-இல் இராமேச்சுர
முடையான் நுந்தா விளக்கிற்காக 20 காசு தந்ததும் இதில் கண்டிருக்கிறது.
விக்கிரமசோழன் காலத்தில் (கி. பி. 1118, 1124, 25) மூவேந்தவேளான் ஒரு
விளக்கிற்காக 18 காசும் உலகளந்த மூவேந்த வேளான் 18 காசும்
கொடுத்துள்ளார்கள். மூன்றாம் குலோத்துங்கன் (கி. பி. 1213) காலத்தில்
தேவதானத்தில் எல்லை குறிக்கப்பட்டுள்ளது.
இத்திருக்கோயிலில்
சோழமன்னர்களுள் மதுரைகொண்ட
|