|
கோப்பரகேசரிவர்மன்,
இராஜராஜ ராஜகேசரிவர்மன் (முதலாம்
இராஜராஜசோழன்), இராஜகேசரிவர்மனாகிய உடையார் வீர ராஜேந்திர
தேவன், இராஜகேசரிவர்மனாகிய உடையார் இராஜமகேந்திர தேவன்,
முதற்குலோத்துங்கன், விக்கிரமசோழதேவன் இவர்கள் காலங்களிலும்,
பாண்டியர்களில் பெருமாள் விக்கிரமபாண்டியன் காலத்திலும், விஜயநகரப்
பரம்பரையினரி்ல் வீரவிருப்பண்ண உடையார் காலத்திலும் செதுக்கப்பெற்ற
கல்வெட்டுக்கள் இருக்கின்றன.
இக்கல்வெட்டுக்களில்
இறைவர் திருக்கடைஞாழல் பெருமான் அடிகள்,
திருக்கடைஞாழல் ஆழ்வார், தோன்றாத்துணை ஆளுடையார்,
திருக்கடைஞாழல் உடையார் என்னும் பெயர்களால் குறிக்கப்பெற்றுள்ளனர்.
இவ்வூரை
மதுரைகொண்ட கோப்பர கேசரிபன்மரின் கல்வெட்டு
வடகரைதேவதானம் திருப்பாதிரிப் புலியூர் எனவும், இராஜகேசரிபன்மரான
உடையார் இராஜமகேந்திர தேவர் கல்வெட்டு வடகரை இராஜேந்திரசோழ
வளநாட்டு மேல்கால் நாட்டுப் பிர்மதேயம் திருப்பாதிரிப்புலியூர் எனவும்,
விக்கிரமசோழ தேவர் கல்வெட்டு இராஜராசவள நாட்டுப்
பட்டான்பாக்கைநாட்டுத் திருப்பாதிரிப்புலியூர் எனவும், வீரமே துணையாக
என்று தொடங்கும் மெய்க்கீர்த்தியையுடைய வீரராசேந்திரசோழதேவர்
கல்வெட்டு இராஜேந்திரசோழ வளநாட்டுப் பவித்திரமாணிக்கவள நாட்டு
பிர்மதேயம் பரநிருப பராக்கிரம சதுர்வேதிமங்கலம் எனவும் கூறுகின்றன.
மதுரைகொண்ட
கோப்பரகேசரிவர்மன் கல்வெட்டு வடகரை
தேவதானம் பாதிரிப்புலியூர் திருக்கடைஞாழல் பெருமான் அடிகளுக்கு
எனவும், கோவிராசகேசரிபன்மரான
உடையார் ஸ்ரீஇராசமகேந்திரதேவரின்
கல்வெட்டு வடகரை இராசேந்திர சோழவளநாட்டு மேல்கால்நாட்டுப்
பிர்மதேயம் பாதிரிப்புலியூரான பரநிருபபராக்கிரம சதுர்வேதி மங்கலத்து
உடையார் திருக்கடை ஞாழலுடையாருக்கு எனவும், முதற்குலோத்துங்க
சோழன் கல்வெட்டு திருப்பாதிரிப்புலியூர்த் திருக்கடைஞாழல் உடைய
பெருமான் அடிகள் எனவும் குறிப்பிடுகின்றன. ஆதலால் ஊரின் பெயர்
பாதிரிப்புலியூர் ஆகவும் கோயிலின் பெயர் ஞாழற்கோயிலாகவும்
கொள்ளவேண்டும்.
நாவுக்கரசு
பெருந்தகையார் கடிபொழில்சூழ் ஞாழற் கோயில் என்று
தாம் அருளிய அடைவுதிருத்தாண்டகத்தில்
|