பக்கம் எண் :

226

யருளியதும் இப்பதியாகும்.

     திருப்பூந்துருத்தியிலிருந்து அப்பர் பெருமான் எழுந்தருளி இங்குத்
தங்கி, கைத்தொண்டும் பாடுந் தொண்டும் செய்தார். அவர் சித்திரைச் சதய
நாளிற் சிவானந்த ஞான வடிவான தலமும் இதுவே.

     பங்குனி உத்திரத் திருநாளுக்குப் பரவையார்க்குப் பொன் வேண்டி,
சுந்தரர் இங்கு எழுந்தருளி, இறைவனை வணங்கித் திருப்பணிக்காக
வைத்திருந்த செங்கற்களைத் தலையணையாகக் கொண்டு தூங்கி,
விழித்தெழுந்தபொழுது, அக் கற்கள் பொன்னாயிருந்தமை கண்டு வியந்து
“தம்மையே புகழ்ந்து இச்சை பேசினும்” என்று தொடங்கும் பதிகத்தைப்
பாடியருளியது இத்தலத்திலேதான்.

     திருப்புகலூர் அந்தாதியை இயற்றியவர் பக்தர் நெற்குன்ற வாணர்.
இது அச்சில் வெளிவந்துள்ளது. தருமை ஆதீனப் புலவர், திரு. முத்து.
சு. மாணிக்கவாசக முதலியார் அவர்களாலும் ஒரு புதிய பதிப்பு
வெளியிடப்பெற்றுள்ளது. வடமொழியில் தலபுராணம் இருக்கின்றது.
அச்சாகவில்லை. இவ் வந்தாதியின் அமைப்பும், சொற்பொருளின்பமும்,
பிற திரிபந்தாதிகளுக்கு வாய்க்காத எளிமையும், அஃது அமைந்த
அருமையும், பெரும் புலவர்களுக்கும் விருந்தாயிருக்கும். புகழுரு எய்திய
உ. வே. சாமிநாத அய்யர் அவர்கள் எழுதிய மகாவித்துவான் சரித்திரத்தில்
இதன் சிறப்பை அறியலாம்.

     இக்கோயிலின் முன்கோபுரம் 27 மீ. உயரம் உடையது. மதில்களின்
நீளம் 98 மீ. அகலம் 68 மீ. சுற்றிலும் நந்தவனம் உள்ளது. அதைச்சுற்றி
40 மீ. அகலம் கொண்ட அகழி உள்ளது. உள்ளே இரண்டுபிராகாரங்கள்
உள்ளன.

கல்வெட்டு:

     இக்கோயிலில் 67 கல்வெட்டுக்கள் எடுக்கப்பட்டுள்ளன. அவைகளில்
இராஜராஜன் 14உம், இராசேந்திரன்I 13உம் முதற்குலோத்துங்கன் 12உம்,
மூன்றாம் குலோத்துங்கன் 10உம். பிறவும் உள. அவை பத்துமுதல்
பதின்மூன்றாம் நூற்றாண்டுவரையில் எழுதப்பட்டவையாம். இராஜராஜனுக்கு
முந்திய கல்வெட்டுக்கள் கிடைக்காமையால் அவன் காலத்திலேதான்
செங்கல் தளியான இக்கோயில் கருங்கல் தளியாக மாறியிருக்க வேண்டும்.
இக்கோயிலின் அர்த்த மண்டபத்தை இறையூருடையான் அரையன் கங்கை
கொண்டானான சோழவிச்சாதரப் பல்லவரையன்