|
அளித்திருந்தான்.
இவ்வூரில்,
நம்பியார் குளத்தின் தென்கரையில், ஒரு சாலை ஒன்றைக்
கட்டி, அதில் உச்சிக்காலத்திற்குப் பிறகு பன்னிரு பிராமணர்களுக்கு அமுது
அளிக்கும்படி செயங்கொண்ட சோழமண்டலத்துப் புலியூர்க் கோட்டத்து,
பேரூர்நாட்டு நெற்குன்றத்துக் களப்பாளராஜர், பூலோக மாணிக்கச்
சபையாரிடம் நிலம் கொடுத்துள்ளார். வடகரை இராஜேந்திர சிங்க
வளநாட்டுத் தனியூர் வீர நாராயணச் சதுர்வேதி மங்கலத்துச் சிற்றூராகிய
குண்டூர் பொற்கோயில் சண்டேஸ்வரயோகி, திருநாவுக்கரைய தேவர்க்கு
உச்சியம்போது, அர்த்தயாமம் இவைகளின் வழிபாட்டிற்கு, முதலாம்
இராஜராஜசோழனின் 21 ஆம் ஆண்டில் நிலம் விட்டிருந்தான்.
கோதண்டராமன்
சந்திக்கு, குலோத்துங்க சோழவள நாட்டில்,
முடிகொண்ட சோழப்பேராற்றின் தென்கரையில் தோட்டக்குடியாகிய
இராஜேந்திர சோழநல்லூரில் 45 வேலி நிலம், கோனேரின்மை
கொண்டானின் 14 - ஆம் ஆண்டில் கொடுக்கப்பெற்றிருந்தது.
வீரபாண்டியன் சந்திக்கு, அரிசில், முடிகொண்டான் இவ்வாறுகளுக்கு
இடையில், 10 வேலி நிலங்களின் வரிகள், வீரபாண்டியன் சந்திக்குக்
கொடுக்கப்பட்டிருந்தது.
இவ்வூர்க்கோவிலில்
நரலோகவீரன் மண்டபம் ஒன்றிருந்தது.
க்ஷத்திரியநாதச் சதுர்வேதிமங்கலத்தார் அதில் கூட்டம் கூடுவது வழக்கம்.
இவ்வூரில் முடிகொண்ட சோழப்பேராற்றின் வடகரையில் ஒரு ஆஸ்பத்திரி
இருந்தது. இதில் நோயாளிகளுக்கு உணவு அளிப்பதற்கு, இராசநாராயண
வளநாட்டுத் திருவழுந்தூர் நாட்டுத் தேவூர், விருதராசன் நிலம்
விட்டிருந்தான். இக்கோயிலில் சித்திரையில் பெருந்திருவிழா நடந்து வந்தது.
இராசாக்கள் தம்பிரான் திருவீதி என்று ஒரு வீதிமூன்றாங் குலோத்துங்கன்
காலத்தில் ஏற்படுத்தப்பட்டது. பரகேசரி வர்மராகிய திருபுவனச் சக்கரவர்த்தி
இராஜராஜ தேவரின் 19-ஆம் ஆண்டுக் கல்வெட்டு குளிச்செழுந்த நாயனார்
கோயிலைப் பற்றிக் குறிப்பிடுகிறது. முதற்குலோத்துங்க சோழ தேவரின்
35-ஆம் ஆண்டுக் கல்வெட்டு, நம்பிமுருகன் திருமடத்தைப் பற்றிக்
குறிப்பிடுகிறது. அதில் சித்திரை, வைகாசி விழாக்காலங்களில்
மாகேஸ்வரர்களுக்கு உணவு அளிப்பதற்கு அரசி ஏழுலக முடையாரின்
வேலைக்காரி, இராஜராஜ சோழரம்பையார், நிவந்தம் ஏற்படுத்தியிருந்தார்.
புகலூர்ப் பெருமான்கோயில் மண்டபத்தைக் கட்டியவர் ஆர்க்காட்டுத்
தலைவராகிய சேதிராயர் ஆவர்.
|