பக்கம் எண் :

230

     வடுகநாத தேசிகர் எழுதிய தலபுராணமும், குமரகுருபரர் அருளிய
முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழும் அச்சில் வெளிவந்துள்ளன.
இவைகளன்றி மூவர் அம்மானை முதலான பல நூல்களி்ல் இத்தலத்துச்
சிவபெருமானைப்பற்றிய புகழ்ப் பாக்கள் இருக்கின்றன.

     சடாயு, சம்பாதி இவர்கள் வழிபட்ட செய்தி.

“தள்ளாய சம்பாதி சடாயென்பார் தாமிருவர்
 புள்ளானார்க் கரையனிடம் புள்ளிருக்கு வேளூரே”

என்னும் ஞானசம்பந்தரின் தேவாரப்பகுதியால் அறியக்கிடக்கின்றது.

     சம்பாதி, புள்ளிருக்கு வேளூர் இறைவனை வழிபடற்குக்
காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து நாளும் பூக்கொண்டுவந்த செய்தி

“யோசனைபோய்ப் பூக்கொணர்ந்தங் கொருநாளுமொழியாமே
 பூசனைசெய் தினிதிருந்தான் புள்ளிருக்கு வேளூரே”

என்னும் அவரது தேவாரப் பகுதியில் குறிக்கப்பட்டுள்ளது. இச்சம்பாதிவனம்
மணிமேகலையுள்ளும் கூறப்பட்டுள்ளது.

     சீதையைக் கவர்ந்து சென்ற இராவணனோடு பொருது, சடாயு
உயிரிழந்த செய்தி,

“மெய்சொல்லா விராவணனை மேலோடி யீடழித்துப்
 பொய்சொல்லா துயிர்போனான் புள்ளிருக்கு வேளூரே”

என்னும் அவரது தேவாரப் பகுதியிலும் சொல்லப்பட்டு உள்ளது.
“மந்திரமும் தந்திரமும் மருந்துமாகித் தீராநோய் தீர்த்தருள வல்லான்”
என்னும் அப்பர் பெருமானின் தேவாரப் பகுதி, இறைவன் வைத்தியநாதர்
என்னும் பெயர் பூண்ட காரணத்தைப் புலப்படுத்துவதாகும், இங்ஙனம்,
இவ்வூர்த் தேவாரப்பகுதிகளில் பல சரித்திர சம்பந்தமான உயர்ந்த
செய்திகள் காணப்படுகின்றன.

     இக்கோயில், திருக்கயிலாய பரம்பரைத் திருத் தருமை ஆதீன
அருளாட்சிக்குட்பட்டது. இதுபொழுது இருபத்தாறாம் பட்டத்தில், தருமை
ஆதீனத்தில் அருளாட்சி நடத்தி வரும் மகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ
சண்முகதேசிக ஞானசம்பந்த பராமாசாரிய சுவாமிகள்